பக்கம் எண் :

303

  மாதரைப் படிப்பித்தல்
 
  யாளராகச் செய்யவேண்டும். ஒரோவழிப் பொருள் முடையால் நடைபெற முடியாவிட்டால் பெருந்தகையார்பால் பிச்சை எடுத்தேனும் கல்வி பயிற்றுதல் வேண்டும். அங்ஙனம் செய்யாதொழிவரேல் அப்பிள்ளைகள் செய்யும்பெருந் தீமைகளால் நேரும் பழிபாவங்கள் பெற்றோர்களையே சாரும்.
  விச்சை-கல்வி. அறம்-நல்லொழுக்கம். ஈன்றவர்-தாய்தந்தையர். எய்தும்-சாரும்.
 

4

  அதி. 9--மாதரைப் படிப்பித்தல்
  அறிவாற்றல் பெருமைகளால் ஆண்பெண் ஒப்பே
605
நூலெலா மைந்தரே நுவன்ற தாலவர்
வேலெனும் விழியர்க்கோர் விகற்பங் கூறுவர்
பாலெனும் வேற்றுமை யன்றிப் பங்கமென்
மாலெனு மைந்தர்க்கு மடந்தை யர்க்குமே.
  பிற்காலத்து நூல்கள் பெரும்பாலும் ஆடவர்களாலேயே ஆக்கப் பெற்று அறிவுறுத்தப்பெற்று வந்தன. அதனால் காலவேறுபாட்டால் மாலுற்றுக் கூரிய வேல்போலும் கண்ணையுடைய பெண்பாலர்க்குச் சிறிது குறைவும் கூறுவாராயினர். ஆண்பால் பெண்பால் என்ற பால் வேறுபாடேயல்லாமல் அறிவு ஆண்மை பெருமை முதலிய ஆற்றல்களில் எவ்வகை வேறுபாடும் இல்லை. ஆதலின், அவர்களுக்கும் கல்வியை ஆண்களுக்கொப்பவே கற்பித்தல் வேண்டும்.
  மைந்தர்-ஆண்கள். நுவலுதல்-சொல்லுதல். விகற்பம்-வேறுபாடு; குறைவு. பங்கம்-குற்றம். மடந்தை-பெண். பால்-ஆண்பால், பெண்பால்.
 

1

  மங்கையர்க்கு நன்குணர்த்தல் ஈன்றோர் மாண்பு
606
தீதறத் தன்மையுந் தெய்வ நேயமும்
ஓதரி தானவில் லறவொ ழுக்கமும்
காதலர் வலர்த்தலுங் காந்தர்ப் பேணலும்
மாதருக் குணர்த்தலீன் றோர்க்கு மாண்பரோ.
  பிறப்பு முதலாகிய தீமை எல்லாம் அகன்று சிறப்பு முதலாகிய செல்வமெல்லாம் பெற்று வாழும்படி நல்லொழுக்கமும்,