| நீதி நூல் |
| கடவுளன்பும், சொல்லுதற்கரிய இல்லறமாண்பும், பிள்ளைகளை வளர்த்தலும் கணவனைப் பேணுதலும் ஆகிய உய்யுமுறைமைகளைப் பெண்மக்கட்குக் கல்விவழியாகக் கட்டுரைத்தல் வேண்டுவது தாய்தந்தையர் தனிக்கடமையாம். அதுவே அவர்கட்கு நன்மையுமாகும். |
| தீதற-தீமையகல. நேயம்-அன்பு. ஓதரிய-சொல்லி முடியாத. காதலர்-பிள்ளைகள். காந்தன்-கணவன். மாதர்-பெண்கள். ஈன்றோர்-தாய்தந்தையர். மாண்பு-நன்மை. |
| 2 |
| வேறு |
| பெண்பாலார் கல்வியெலாம் ஆண்பாற்குப் பெரும்பொருளாம் |
607 | வாணியுமை கமலையௌவை முதலியவர் மதரன்றோ மைந்தர் நாவைக் காணிகொள்வா டனைப்போன்ற மடந்தையர்நாச் சேராளோ கதிரோ னில்பார் சேணிகருங் கல்வியிலா மாதரகம் படித்துணரத் தீட்டப் பாடப் பூணிழையா ரறிகுவரேல் நிதியமது போலுமுண்டோ புருடர்க் கம்மா. |
|
| அறிவும் ஆற்றலும் ஆக்கமும் ஆகிய செல்வநலன்களை முறையே அருளும் கலைமகள், மலைமகள், அலைமகள் ஆகிய தெய்வங்கள் பெண்பாலாகும். இம்மூன்றும் ஒருங்கு ஓர் உருவெடுத்தாற்போன்று கண்காண் தெய்வமாய்த் திகழ்ந்து எல்லார்க்கும் எல்லா நிலையிலும் ஏற்புடைய அறநூல்கள் பலவருளி நெடுநாள் வாழ்ந்து தமிழோம்பிய தமிழ்த்தாய் ஒளவையார் பெண்பாலராவர். ஆகவே, பெண்பாலார்க்கே கல்வி முதலுரிமை. ஆண்பாலார் நாவிலுறைந்து நன்மொழி பயில நயந்தருளும் கலைமகளாகிய நாமகள் தன் இனமாகிய பெண்பாலாரைச் சாராளென்று எண்ணுதல் பேதைமையன்றோ? படிப்பில்லாத பெண்கள் ஞாயிறில்லாத மண்ணும் விண்ணும்போல் மனமழுங்கி மதியின்மையான் மாண்பிலாராவர். அழகிய இழையணிந்த பெண்பாலார் உளங்கிளர்ந்து படித்துணரவும் எழுதவும் பாடவும் அறிவாரானால் அதைவிடச் சிறந்த செல்வம் ஆண்பாலார்க்கு வேறு என்னிருக்கின்றது? (ஒன்றுமில்லை யென்பது கருத்து.) |