பக்கம் எண் :

305

  உடன்பிறந்தாரியல்பு
 
  வாணி-கலைமகள்; நாமகள். உமை-மலைமகள். கமலை-அலைமகள்; திருமகள். மாதர்-பெண்பாலார். காணி-உறைவிடம். மடந்தையர்-பெண்பாலார். கதிரோன்-ஞாயிறு. பார்-மண். சேண்-விண். நிகரும்-ஒக்கும். தீட்ட-எழுத. நிதியம்-செல்வம். புருடர்-ஆண்பாலார்.
 

3

  அதி. 10--உடன்பிறந்தாரியல்பு
  முன்பின் பிறந்தார் தந்தைதாய் மக்களாமுன்
608
முன்னவன் சிறுபிதா முன்னை யன்னையாம்
பின்னவ னேயனாம் பின்னை புத்திரி
பன்னருஞ் சோதரர் பன்னி மார்களீங்
குன்னருஞ் சோதரம் போலு முள்ளமே.
  மனமே! நம் முன்பிறந்தோனாகிய தமையன் சிறிய தந்தையாவன். தமக்கை சிறிய தாயாவள். பின்பிறந்தோனாகிய தம்பி மகனாவன். தங்கை மகளாவள். சொல்லுதற்கரிய உடன்பிறந்தாரின் மனைவிமார் உடன்பிறந்தாரே யொக்கும். இங்ஙனம் கொண்டு ஒழுகுவதே வீடும் நாடும் மேன்மையுற்று விளங்கி நலம் பல பயக்கும் நன்னெறியாகும்.
  முன்னவன்-தமையன். பிதா-தந்தை. பின்னவன்-தம்பி. நேயன்-காதலன்; மகன். பின்னை-தங்கை. புத்திரி-மகள். பன்னல்-சொல்லுதல். சோதரர்-உடன்பிறந்தார். பன்னிமார்-மனைவிமார்.
 

1

  வேறு
  கிளைஇலைபோல் உடன்பிறந்தார் கெழுமுதல் பண்பே
609
கொம்பருள் ளுலர்ந்திடக் கூடவாடு மிலைகளும்
பம்பியக்கொம் போங்கிடப் பன்னமுஞ் செழிக்குமால்
தம்பியண்ண னென்னவே சார்ந்துளோர்த மின்பமும்
வெம்புதுன்பு மொன்றென மேவிவாழ்தன் மேன்மையால்.
  மரக்கிளை ஈரம் புலர்ந்து உள்உணங்க அதன்மேலுள்ள இலை முதலியவும் வாடும். அது செழித்திருக்க அவைகளும் செழித்
 

நீ.-20