| நீதி நூல் |
| திருக்கும். அதுபோல் தம்பி, அண்ணன் என்னும் இருவரும் ஒருவரையொருவர் சார்ந்து ஒற்றுமையாய் இன்ப துன்பங்களை ஒக்க அடைந்து பொருந்தி வாழ்தல் மிகவும் மேன்மையாகும். |
| கொம்பு-மரக்கிளை. உலர்தல்-உணங்கல். பம்பல்-வாடல். பன்னம்-இலை. வெம்பு-வருந்து. மேவி-பொருந்தி. |
| 2 |
| உடைமையிற்பங் கில்பிறப்பை ஓம்பல்பிறப் பாண்கடனே |
610 | உடன்பிறந்த சோதரிக் கொத்தபாக மிலைபிறப் பிடந்துறந்து நாளையோ ரேழையிற் கிழத்தியாய்த் தொடர்ந்துசெல்வ ளாதலாற் றொடர்புறஞ் சகோதரர் அடர்ந்தவன்பொ டவளைநன் காதரிக்க வேண்டுமால். |
|
| உழுவலன்புசேர் உடன்பிறந்தாளைத் தம்மினும் சிறப்பாக அன்புடன் பேணிவரவேண்டும். ஏனென்றால்? முறையற்ற இந்துச் சட்டப்படி அவளுக்குத் தந்தை உடைமையில் ஆண்பாலாரைப்போல் பங்குகிடையாது. பெண்பாலார்க்குப் பங்கில்லையென்னும் பிழை வழக்கிருப்பதால் அவள் ஓர் ஏழையை மணந்து, தந்தைவீடகன்று எளியவாழ்க்கை நடத்த நேரினும் நேரும். ஆகவே, அவளை எந்நாளும் உடன்பிறந்தாராகிய ஆடவர் செறிந்த அன்புடன் பாதுகாத்து வருதல் அறமுறையாகும். |
| பாகம்-பங்கு. இல்-வீடு. கிழத்தி-மனைவி. அடர்ந்த-செறிந்த ஆதரித்தல்-பாதுகாத்தல். |
| 3 |
| எல்லார்க்கும் அன்புசெய ஈந்தான் இவ்வுடல் |
611 | நாடுவேறு குலமொடு நலமும்வேறு ளாரையும் நீடுநாரொ டோம்புதல் நீதியென்னி னொருவயிற்று ஊடுபோந்த சோதர ரொத்துவாழ்கி லாரெனின்* வீடுமூடும் வாய்நலம் வீடுங்கேடுங் கூடுமே. |
|
| நாடு பிறப்பு நடை யுடை பழக்கவழக்கம் முதலிய நலமெலாம் வேறுபட்ட மக்களும் ஒருவரோடொருவர் உடன்பிறப்புப்போல் ஒற்றுமையுற்று ஒருவருக்கொருவர் வேண்டுவ வுதவி வாழ்வதே உயர்ந்த மக்கட்பிறப்பின் சிறந்த தன்மையும் முறைமையுமாகும். அப்படியிருக்கவும், ஒரு தாய்வயிற்றுப் |
| *பகச்சொல்லிக். திருக்குறள், 187. |