| உடன்பிறந்தாரியல்பு |
| பிறந்த உடன்பிறப்பாளர்கள் ஒற்றுமையுடையராய் வாழ்கிலாரென்றால் அந்தோ! என்சொல்வது? அப்படி வாழாவிட்டால் அவர்களுக்குப் பேரின்பப் பெருவீடும் அடைபடும். வாய்ந்த குடும்பநலம் நாட்டுநலம் எல்லாம் பயனின்றி அழியும். சொல்லொணாப் பெருங்கேடுகளும் பொருந்தும். ஆகவே, மிகுதியும் முயன்று அன்புடன் ஒற்றுமையாக வாழ்வதே ஏற்புடைத்தாகும். |
| குலம்-பிறப்பு. நீடு-அழியாத. நார்-அன்பு. நீதி-முறைமை. வீடு-பேரின்பப் பெருவீடு. வீடும்-அழியும். கூடும்-பொருந்தும். |
| 4 |
| தந்தை தாயின் உடன்பிறப்புச் சார்மக்கள் பேணலறம் |
612 | தந்தையோடு தாயொடு தாம்பிறந்த சோதரர் மைந்தரானுந் தந்தைகொண் மறுமனை வயிற்றிடை வந்தபேர்க ளாயினு மற்றுளோர்க ளாயினு முந்துகாத லோடுநட் புவந்துவாழ்தல் நன்றரோ. |
|
| தந்தையின் கூடப்பிறந்தவர்கள், தாயுடன் பிறந்தவர்கள், அவர்தம் பிள்ளைகள், தந்தை மறுமணம் புரிந்துகொண்ட மாற்றாந்தாயின் பிள்ளைகள், ஏனையோர் யாவராயினும் எல்லாருடனும் ஒரு தாய் வயிற்றுப் பிறந்தார்போல் பேரன்புகொண்டு நண்பும் மகிழ்வும் நீங்காது ஒற்றுமையுடன் வாழ்வதே நன்மையாகும். |
| மைந்தர்-மக்கள். மறுமனை-பின்மணந்த மனைவி, மாற்றாந்தாய். காதல்-பேரன்பு. உவப்பு-மகிழ்வு. நன்று-நன்மை. |
| 5 |
| தெய்வநிலை அண்டங்கள் தெரிக்கும கல்லில் |
613 | சிறுவரைப் போதோர் கல்லைச் சேணிடை நிறுவு வோனை அறுகுண னென்போம் பார்மே லன்னதன் கீழெப் பாலும் துறுவிய அண்ட கோளத் தொகைகளெண் ணிறந்த வானின் நிறுவுவோன் தன்னை யின்னே நெஞ்சமே யுன்னா தென்னே. |
|
| மனமே! நம்மில் ஒருவன் ஒரு கல்லை மண்ணினின்று விண்ணிலெறிகின்றான்-அக்கல் மண்ணின் இழுப்பாற்றலால் உடன் நிலத்தே வந்து விழுகின்றது. எறிந்தவன் மந்திரவலியால், அக்கல்லைச் சிறுபொழுது நடுவே நிற்கச்செய்யின் அவனை, வித்தகுசெயல் செய்த தெய்வ ஆற்றல் படைத்த விழுமியோ |