| நீதிநூல் |
| செம்பொனைத் திரணமா மதித்திடத் தகுதியோர் தம்பெரும் புகழியம் புதற்குந் தரமதோ. . |
|
| மெய் வாய் கண் மூக்குச் செவியெனும் ஐம்புல ஆசையை அகற்றி, மனமாகிய விலங்கை அறிவுத்தூணிற் கட்டித், துன்பத்தையும் இன்பமாகக் கருதிப் பொன்னைத் துரும்பு என மதித்து நடக்கும் பெரியோர் பெரும்புகழைச் சொல்லமுடியாது. |
| கம்பம்-தூண். வீக்கல்-கட்டல். அஞர்-துன்பம். திரணம்-துரும்பு. |
| 6 |
| மெய்யுணர்ந்தார் துன்புறினும் விலகார் பெருந்தகைமை |
60 | தலைகீழுறச் செய்யினுந் தீபம்விண் டன்னை நோக்குங் கலைதேயினுந் தண்கதிர் வீசுமக் கங்குற் றிங்கள் விலைமாமணி யைப்பொடி செய்யினு மின்ன றாது நிலைநீங்குவ ரோதுயர் மேவினு நீர்மை யோரே.. |
|
| விளக்கினைத் தலை கீழாகப் பிடிப்பினும் சுடரொளி வானத்தையே நோக்கும். திங்கள் தேய்ந்து வரினும் குளிர்ந்த கதிரையே வீசும். மாணிக்கம் பொடி செய்யப்படினும் விளக்கம் குன்றாது. இவைபோன்று பெரியவர் துன்புறினும் பெருந்தன்மையிற் குன்றார். |
| கங்குல்-இரவு. மின்-விளக்கம். |
| 7 |
| இன்மொழியா லறமுரைத்து ஈடேற்றுவன் ஆசான் |
61 | கைத்திட்ட மருந்திலக் காரங் கலந்து கூட்டி மத்தித்தருள் பண்டிதர் போன்மற நோய்த விர்ப்பான் எத்திக்கினுங் கேட்பவர் காதுள மின்ப மேவித் தித்தித்திட ஆரியர் நன்மறை செப்பு வாரே. |
|
| மருத்துவர் கைப்பு மருந்தின்மேல் இனிப்புப்பூசி உண்பித்து உடல் நோயை நீக்குவார். ஆசிரியரும் தம் இன்மொழிகளால் அறமுரைத்து நன்னெறி ஒழுகச் செய்து உயிர்நோயாகிய பிறவியை மாற்றுவர். |
| அக்காரம்-இனிப்பு. மறம்-பாவம்; உயிர்நோய். |
| 8 |