| ஞானாசிரியன் பெருமை |
| பலர்க்கும் விளங்கப் பகுத்துரைப்போன் ஆசான் |
62 | சிறுவாய்க் கலத்துட் டுளியாகச் செலுத்து நீர்போல் அறியாச் சிறுவர்க்கு முணர்ந்தறி யாத வர்க்கும் வறியார்க்கும் விளங்கிட வேதெளி வாவகுத்து நெறியைத்தெரி விப்பர்நன் னூனெறி நின்ற மேலோர்.. |
|
| வாய் ஒடுங்கிய கலத்துள் நீரைச் சிறிது சிறிதாகச் செலுத்துவதுபோன்று, ஆசானும் நன்னெறி நூன்முறையைச் சிறுவர்க்கும், உணர்ந்தறியாதார்க்கும், ஏழைகட்கும் விளங்கும்படி வகைசெய்து தெளிவாக உரைப்பாண். |
| கலம்-ஏனம் (பாத்திரம்). |
| 9 |
| யைந்தெல் லார்க்கும் இன்புறுத்துவோன் ஆசான் |
63 | வைவார்தமை வாழ்த்தியு நெஞ்சில் வருத்த முற்று நைவாருடன் நைந்தழு துந்தமை நண்ணித் துன்பஞ் செய்வாருறு பீழை நினைத்துஞ் சிந்தை நொந்து மெய்மாமறை யின்பய னோதுவர் மேன்மை யோரே. |
|
| மெய்யுணர்ந்தார் தம்மை வைவாரை வாழ்த்துவர். உளம் வருந்தித் துன்புறுவாருடன் தாமும் துன்புற்று அழுவர். தமக்குத் துன்பஞ் செய்வார்க்கு அத்தீவினைப் பயனால் துன்பம் வருமே என்று மனம் நொந்து ஆண்டவன்பால் மன்றாடுவர். எல்லார்க்கும் உண்மைத் தெய்வமறையின் சிறப்பை எடுத்துக் கூறுவர். |
| வைவார்-திட்டுவார். நைவார்-துன்புறுவார். பீழை-துன்பம். மேன்மையோர்-மெய்யுணர்ந்தார். |
| 10 |
| ழோர்க்குப் போதிக்கினும் மெய்யுணர்ந்தார் கேடுறார் |
64 | பரிதியின் கிரணமங் கணமதிற் படியினும் அரிதின்மா சணுகுறா தகலல்போ லினியநற் சரிதமில் லவர்குழாஞ் சார்ந்துபோ திக்கினுந் துரிதவெம் பவமுறார் தொன்மறைக் கிழவரே. |
|
| |