பக்கம் எண் :

38

  நீதிநூல்
 
  ஞாயிற்றின் கதிர்கள் அங்கணத்துள் தூயஅல்லாத அழுக்கு நீர் முதலியவற்றில் படியினும் அக்கதிர்கள் கெடுவன அல்ல. அதற்கு மாறாக அந்நீர் முதலியன தூய்மை எய்தும். இவை போன்று, மெய்யுணர்ந்தார் நல்லொழுக்கமில்லாரிடைச் சார்ந்து போதித்தாலும் தாம் தீங்கெய்தார். அவர்களை நல்லொழுக்கத்தில் நிற்கச்செய்வர்.
  பரிதி-ஞாயிறு. அங்கணம்-கலங்கழுவுமிடம். மாசு-அழுக்கு. சரிதம்-ஒழுக்கம். துரிதம்-கேடு. மறைக்கிழவர்-மெய்யுணர்ந்தார்.
 

11

  அதி. 6. பொய்க்குருவின் தன்மை
  அருளில் நெஞ்சத்தான் ஆசான் ஆகான்
65
திருடன் பொருட்கா வலனாதலுஞ் செல்வழிக்குக்
குருடன் குருடன்றனை யேதுணைக் கொள்ளல்போலும்
இருடங் குளமாந்தரை வான்கதி யேற்றவென்னா
அருடங்கிய நெஞ்சமி லான்குரு வாயவாறே..
  பொருளைக் காக்க கள்ளனை வைத்தலும், குருடனுக்கு வழித்துணை குருடனாக அமைதலும் பயன் இல்லாமைபோல், அருள் சேர்ந்த நெஞ்சமில்லாதவன் ஆசானாய் மக்கள் அறியாமையை நீக்க மேற்கொள்வது பயனில்லாததாகும்.
  இருள்-அறியாமை.
 

1

  குற்றமிலான் உரையையே கொள்வர் உலகோர்
66
பெருவெம் பிணியாளன் மற்றோர்பிணி பேரும்வண்ணந்
திருமந் திரஞ்சொல்வ னென்றோதிடிற் றிண்மையாமோ
தருமந் தனைநாட்ட வந்தோன்குறை தானுளானேல்
இருமண் டலமீதவன் சொல்லெவ ரேற்பர் மாதோ..
 

தன்நோயைப் போக்கிக்கொள்ள முடியாதவன் பிறர் நோயைப் போக்க மந்திரிப்பேன் என்பது உறுதிதராது. அதுபோன்று, குற்றமுள்ள ஒருவன் நன்மையை உலகுக்குச் சொன்னால் உலகத்தார் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

  இரு மண்டலம்-பெரிய உலகம்.
 

2