பக்கம் எண் :

39

  பொய்க்குருவின் தன்மை
 
  பேராசை ஆசானைப் பேருலகோர் கொள்ளார்
67
பாவச் சலதிக்குள் உறாவகை பாருளோர்க்குக்
காவல் துணையாங் குரவன்குணங் கல்வியின்றி
ஆவல் தளைபூண் டவனேயெனி லாருங்கொள்ளார்
ஏவத் தெரியான் திமின்மீதெவர் ஏறுவாரே.
  மரக்கலத்தைச் செலுத்த அறியாதவன் துணைகொண்டு யாரும் மரக்கலத்தி லேறார். அதுபோன்று, நல்ல குணமும் நற்படிப்பும் இல்லாதவனும், ஆசைப் பிணிப் புற்றவனுமான ஆசானைக்கொண்டு யாரும் பிறவிக்கடலை நீந்த முன்வரார்.
  பாவச் சலதி-பிறவிக்கடல். திமில்-மரக்கலம்.
 

3

  அடக்க மிலாதவர் ஆசிரியர் ஆகார்
68
பழிதீர் கலையாவும் உணர்ந்தும் பலர்க்குரைத்தும்
இழிவே யுறத்தாம் அடங்காமதி யீனரார்க்கும்
வழிகாட் டிடநாட்டு மரத்தையும் வையமேச
விழியற் றவன்கையினில் வைத்த விளக்குநேர்வார்.
  கற்றும் பிறர்க்குச் சொல்லியும் தாம் அடங்காத அறிவிலாரை யாரும் ஆசானாக் கொள்ளார்; கொண்டால், வழி காட்டி மரம் நின்ற இடத்தே நிற்பது போலவும், குருடன் கையில் விளக்கு ஏத்திக் கொடுப்பது போலவும் பயனின்றாம்.. இவையிரண்டும் கூடவரும் துணையாகா.
  மதியீனர்-அறிவிலார். விழியற்றவன்-குருடன்.
 

4

  பொருளாசை யுள்ளான் அருளாசான் ஆகான்
69
சொன்னாத் திருடன்சிறு கள்வனைத் தூரியேசல்
என்னப் பொருளாசை யுளான்பிறர் இச்சைதீர்ந்து
மன்னத் திருஞான முரைத்தன்மற் றோர்துறக்கும்
பொன்னைக் கவரச்செயும் வஞ்சனை போலுமாதோ.
 

பெருமதிப்புள்ள தங்கத்தைக் களவு செய்வோன் குறைந்த மதிப்புள்ள சிறு பொருளைக் களவு செய்பவனைப் பழித்துத் திட்டுவன். அதுபோன்றதேயாம், பண ஆசை உள்ளவன்