| | நீதிநூல் |
| | பிறருக்குத் துறவு ஞானம் போதிப்பது. மேலும், துறந்தவர் பொருளைத் தான் கவர்ந்துகொள்ளும் கருத்துக்கு ஏதுவுமாகும். |
| | சொன்னம்-தங்கம்; பொன். திருஞானம்-மெய்யுணர்வு. |
| | 5 |
| | வேறு |
| | சிறுவரும் தன்உளமும் சிரிக்கும் கொடியனை |
| 70 | வாயில் தேனுந்தன் வாலிற் கொடுக்குஞ்சேர் ஈயின் வாயினி லிங்கிதச் சொல்லொடுந் தீய செய்கையு ளானைத் தினஞ்சிறு சேயும் எள்ளுந்தன் சிந்தையும் எள்ளுமே. |
|
| | தேனுங் கொடுக்கும் முன் பின் அமைந்த தேன் ஈயைப் போன்று வாயில் இனிய சொல்லும் கையில் கொடுஞ்செயலும் உள்ளவனை நாளும் சிறுவர்களும் இகழ்வர். அவனுடைய உள்ளமும் சிரிக்கும். |
| | 6 |
| | இம்மைப்பற் றில்லானே ஆசானுக் கேற்றவன் |
| 71 | இகத்தின் வாழ்வினில் இச்சைய றான்றனை சகத்தி னிற்குரு சாமியென் றோதுதல் சுகத்தை நீங்கித் துயரஞ் செறிநரர் அகத்தை வீடென்(று) அறைதல் சிவணுமே.. |
|
| | இவ்வுலக வாழ்வில் விருப்ப மறாதவனை ஆசிரியனாகக் கொள்ளுதல் துன்பம் நிறைந்தவர் வீட்டைக் கடவுளின்ப நிலையமாகக் கொள்ளுதல் ஒக்கும். |
| | அகம்-குடியிருக்கும் வீடு. வீடு-கடவுளின்பம். சிவணுதல்-பொருந்துதல்; ஒக்கும். |
| | 7 |
| | உணர்ந்து நெறிபிழைத்தோர் உய்யார் ஒருநாளும் |
| 72 | ஆதி தேவன் அறிவில் லவர் செயுங் கோதி னைக்கமை கொண்டு பொறுக்கினும் நீதி நூலை யுணர்ந்து நெறிதவிர் வேதி யர்க்கு விமோசன மில்லையே. |
|