பக்கம் எண் :

41

  பொய்க்குருவின் தன்மை
 
  முதல்பெருங்கடவுள் அறிவில்லாத மக்கள் செய்யும் குற்றங்களைப் பொறுத்து மன்னித்தாலும் கற்றுணர்ந்தும் முறைதவறிய அறிவுடையவரை ஆண்டவன் மன்னிக்க மாட்டான்.
  கோது-குற்றம். கமை-பொறுமை. வேதியர்-அறிவுடையர்.
 

8

  அறிவில் ஆசான் ஆட்டுத்தோல் புலியே
73
ஒருமை யாய்த்தன் உதர நிமித்தமே
தரும வேடந் தரிக்குதல் வெம்புலி
புருவை தன்னைப் புசிக்கப் புருவையின்
சருமம் பூண்டங்குச் சார்தல் நிகர்க்குமே.
  தனித்துத் தன் வயிறு வளர்த்தற்பொருட்டு ஆசிரியக் கோலம் பூணுதல், புலி ஆட்டை உண்ணுதற் பொருட்டு ஆட்டுத் தோலைப் போர்த்தலோடு ஒக்கும்.
  ஒருமை-தனிமை. உதரம்-வயிறு. புருவை-ஆடு. சருமம்-தோல். நிகர்க்கும்-ஒக்கும்.
 

9

  _____