பக்கம் எண் :

42

  நீதிநூல்
 
 அதி. 7--தாய் தந்தையரை வணங்கல்
  தாய் தந்தைக்கு ஈடெங்கும் இல்லை
74
சின்னவோர் பொருள்தந் தோரைச்
    சீவனுள் ளளவு முள்ளத்து
உன்னவே வேண்டு மென்ன
    உரைத்தனர் பெரியோர் தேகந்
தன்னையா ருயிரைச் சீரார்
    தரணியின் வாழ்வைத் தந்த
அன்னைதந் தைக்குச் செய்யும்
    அருங்கைம்மா றுளதோ அம்மா.
  சிறுபொருள் தந்தவரையும் வாழ்நாள் முற்றும் மனத்தில் நினைக்க வேண்டும் என்பது பெரியோர் திருமொழி. அப்படியானால் நம் உடல் உயிர் வாழ்வு எல்லாம் தந்தருளிய தாய் தந்தையரை மறவாதிருப்பதல்லாமல், செய்யும் கைம்மாறு இல்லை.
  தரணி-உலகம்.
 

1

  ஈன்று புறந்தந்த தாயினை ஏத்து
75
கடவுளை வருந்திச் சூலாய்க் கைப்புறை யுண்ட னந்தம்
இடர்களுற் றுதரம் தன்னில் ஈரைந்து திங்கள் தாங்கிப்
புடவியில் ஈன்று பன்னாள் பொற்றனப் பாலை யூட்டித்
திடமுற வளர்த்து விட்ட செல்வியை வணங்காய் நெஞ்சே.
 

கடவுளைத் தொழுது கருவுற்றுக் கசக்கும் மருந்துண்டு பல துன்பங்கள் அடைந்து பத்துத்திங்கள் சுமந்து பெற்றெடுத்துப் பாலூட்டி வலிமையுடன் வளர்த்த அருமைத் தாயை நெஞ்சமே வணங்குவாயாக.

  சூல்-கரு. உறை-மருந்து. அனந்தம்-பல. புடவி-உலகம். செல்வி-அருந்தாய்.
 

2

 

கண்காண் தந்தைதாய்க் கொப்பிலை கண்டீர்

76
எப்புவி களும்பு ரக்கு மீசனைத் துதிக்க வேண்டின்
அப்பனே தாயே யென்போ மவரையே துதிக்க வேண்டின்