பக்கம் எண் :

43

 தாய்தந்தையரை வணங்கல்
 
 
ஒப்பனை யுளதோ வேலை யுலகிற்கட் புலனில் தோன்றுஞ்
செப்பருந் தெய்வம் அன்னார் சேவடி போற்றாய் நெஞ்சே.
 

எல்லா உலகங்களையும் படைத்துக் காக்கும் ஆண்டவனைத் தொழவேண்டுமானால் அம்மையே அப்பா என்று ஒப்புரைத்துத் தொழுவோம். கண்கண்ட தெய்வமாகக் காணப்படும் தாய் தந்தையருக்கு எங்கும் ஒப்பில்லை; அவர்கள் திருவடியை நெஞ்சே போற்று.

  புவி-உலகம். புரத்தல்-காத்தல். வேலை-கடல். புலன்-பொறியுணர்வு.
 

3

 தாய் தந்தையரைப் போற்றாரைத் தண்டிப்பான் ஆண்டவன்
77
வைத்தவர் உளமு வப்ப மலர்நிழல் கனியீ யாத
அத்தருத் தன்னை வெட்டி அழலிடு மாபோல் ஈன்று
கைத்தலத் தேந்திக் காத்த கதற்றாய் பிதாவை யோம்பாப்
பித்தரை அத்தன் கொன்று பெருநர கழற்சேர்ப் பானே..
 வைத்து வளர்த்தவர்க்குப் பூ, நிழல், பழம் நல்காத மரத்தை வெட்டி எரிப்பது போன்று, தாய் தந்தையரை வணங்காத அறிவிலாரை ஆண்டவன் இருள் உலகில் தள்ளி வருத்துவன்.
 தரு-மரம். அழல்-தீ. இருள் உலகு-நரகம்.
 

4

 ஈன்றார் வன்சொல் இனியநற் பாகே
78
ஈன்றவர் நம்மால் உற்ற எண்ணரும் இடர்கட் கான்ற
மூன்றுல கமுமொப் பாமோ மூப்பினால் இளைப்பால் அன்னார்
கான்றவன் சொற்கள் கன்னல் கான்றவன் பாகெ னக்கொண்டு
ஊன்றுகோ லென்னத் தாங்கி ஊழியஞ் செய்யாய் நெஞ்சே.
 

பெற்றவர்கள் பிள்ளைகள் பொருட்டு அளவிலாத் துன்பம் அடைந்தனர். அத்துன்பத்திற்கு ஈடாக மூன்று உலகமும் கொடுப்பினும் போதா. அவர்கள் தங்கள் மூப்பினாலும் சோர்வினாலும் கடுஞ் சொற்கள் சொல்ல நேர்ந்தால், அச்சொற்களை வெல்லப்பாகென்று கொண்டு அவர்களைப் போற்றிவரல் மக்கட்குக் கடன்.

 

கன்னல்-கரும்பு. பாகு-வெல்லப்பாகு.

 

5