பக்கம் எண் :

44

 நீதிநூல்

 எதிர்நோக்கா அன்புதவி ஈன்றாரே செய்வர்
79
ஈங்கெதி ருதவி வெஃகா தெவருமே ருதவி செய்யார்
ஓங்குஞ்சேய் வாழும் வீயு முடலெய்க்கும் பொழுது தம்மைத்
தாங்கிடுந் தாங்கா தென்னுந் தன்மைநோக் காது பெற்றோர்
பாங்குடன் வளர்க்கு மன்பு பரவலாந் தகைமைத் தன்றே.

உலகத்தார் எதிர் உதவி நாடியே ஓர் உதவி செய்வர். வாழ்வுக்கும் சாவுக்கும் இலக்காகிய உடம்பு தளர்ந்த காலத்துப் பிள்ளைகள் தம்மைக் காப்பாற்றுவார் என்று பெற்றோர்கள் எதிர் பார்த்துப் பிள்ளைகளை வளர்ப்பதில்லை. அதனால் பெற்றோர் அன்பு அளவிட்டுக் கூறமுடியாது.

 

வெஃகல்-விரும்பல். வீதல்-சாதல்.

 

6

  ஈன்றார்க்கு நினைவுசெயல் எய்தும் மகப்பொருட்டு
80
மண்ணினி லன்னை தந்தை மறம்அறஞ் செயினும் நோன்பு
பண்ணினு முடல் வருந்தப் பணிபுரி யினும ருந்தொன்று
உண்ணினுங் களிக்கி னுந்தன் புற்றயரினுமனத்தொன்று
எண்ணினுந் தம்பொருட்டன்று ஈன்சுதர் பொருட்டாலன்றோ.
பெற்றோர்கள் வன்செயல் மென்செயல்கள் செய்யினும், தவம் பேணினும், மெய்வருந்திப் பாடுபடினும், மருந்துகொள்ளினும், மகிழினும், இடருற்றுத் தளரினும், ஏதும் நினைக்கினும் எல்லாம் பிள்ளைகள் பொருட்டேயன்றித் தம்பொருட் டன்று.
 பணி-பாடு. களிப்பு-மகிழ்வு. அயர்வு-தளர்வு. சுதர்-மக்கள்.
 

7

 எல்லாம் பழக்கிவளர் ஈன்றார்க்கு ஒப்பாரியார்
81
ஐயமெய் யம்ம ணத்தோ டழுவதை யன்றிப் பேசச்
செய்வொன் றறியா நொய்ய சிற்றுடல் சேய்வ ளர்த்திங்
குய்யவேண் டுவன செய்த ருயிரினு மினிதாக் காக்கும்
பொய்யிலன் புடைத்தாய் தந்தை போல்பவ ருளரோ நெஞ்சே.

நெஞ்சே நாம் ஆடைகட்டத் தெரியாது அழுஞ்செய லன்றி வேறு செயல் அறியாது பேச்சற்றிருந்தோம். நம்மை வளர்த்துப் பேசச், செய்யப் பழக்கி உயிரினும் சிறப்பாகக் காத்தவர் பெற்றோர்கள். அவர்களை யொத்த மெய்யன்புடையவர்கள் யாருளர்?

 

8