பக்கம் எண் :

45

  தாய் தந்தையரை வணங்கல்
 
  எல்லாம் பெறலாம் ஈன்றார்ப் பெறலரிது
82
மனையவள் வீயின் வேறோர் மனைவியைக் கொளலாம் பெற்ற
தனையரா தியரி றப்பில் தனித்தனி பெறலாம் பின்னும்
புனைபொரு ணீங்கின் மற்றோர் பொருளையும் பெறலாமத்தன்
அனையிறந் திடின்வேறத்த னனைவரு வாரோ நெஞ்சே.
 

நெஞ்சே இல்லாள், மக்கள், பொருள் இவரை இழந்தால் மீட்டும் பெற்றுக்கொள்ளலாம். அத்தன் அன்னைய ரிறந்திடின், வேறு அத்தன் அன்னையர் வருவாரோ? வாரார்.

 

அனை-அன்னை. அத்தன்-தந்தை.

 

9

  வேறு
  தாங்கொணாத் துன்பினும் தந்தைதாயைக் காக்க
83
ஒருத்திபஞ்ச காலத்தில் தாதைக்குத்
    தன்முலைப்பா லூட்டிக் காத்தாள்
எருத்தமிசைத் தந்தையினைச் சுமந்தோடி
    யொருவனொன்னா ரிடரைத் தீர்த்தான்
ஒருத்தன்தன் தந்தைக்கே உயிர்கொடுத்தா
    னெனப்பலவா வுரோமை நாட்டின்
சரித்திரஞ்சொல் வதையறிவாய் நெஞ்சமே
    யீன்றோரைத் தாங்கு வாயே..
  நெஞ்சே பஞ்சகாலத்தில் ஒருத்தி தன் முலைப்பாலூட்டித் தந்தையைக் காப்பாற்றினள். ஒருவன் தந்தையைக் கழுத்தில் சுமந்து ஓடிப் பகைவரினின்றும் காத்தான். ஒருவன் தந்தைக்காகவே உயிரைக் கொடுத்தான். இவைபோன்ற வரலாறுகள் பல உரோமை நாட்டில் நிகழ்ந்தன. அவைபோல நீயும் ஈன்றாரைக் காப்பாற்றுவாயாக.
  எருத்தம்-கழுத்து. ஒன்னார்-பகைவர். இடர்-துன்பம்.
 

10