பக்கம் எண் :

46

  அதி. 8--மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும்
  சேயர்க்குத் தீயவர் சேர்க்கை விலக்குக
84
அயற்பொருள் நிறங்கவர் ஆத னங்கள்போல்
செயப்பிறி தறிகிலாச் சேயர் சுற்றுளோர்
கயப்புறுந் தீச்செயல் கற்கை யாலவர்
நயப்புறுஞ் சேர்க்கையை விலக்கல் நன்றரோ.
 

உடை முதலியன தாம்சார்ந்த இடத்துள்ள நிறங்களைக் கவர்ந்து அந்நிறமாகின்றன. அவைபோல் சிறுபிள்ளைகளும் தம்மைச் சுற்றியுள்ளார் தன்மைகளையே பழகுவர். அதனால், தீயவர் சேர்க்கையை விலக்குதல் நன்மையாம்.

 

ஆதனம்-உடை. கயப்பு-கசப்பு.

 

1

  நலமெலாம் பாலர்க்கு நண்ணும் இளமையில்
85
வளையிள மரந்தனை நிமிர்த்தல் வாய்க்கும்பொன்
இளகிய பொழுதணி யியற்ற லாகுதல்
வளமுறு கேள்விநூன் மாண்பு நற்குணம்
இளமையி லன்றிமூப் பெய்தின் எய்துமோ.
  மரத்தின் வளைவை இளமையில் நிமிர்த்தலும் பொன் இளகியிருக்கும்போது நகை செய்தலும் வாய்ப்பதுபோல், மக்கட்கு இளமையில்தான் நல்ல நூற்கேள்வியும் மாண்பும் நற்குணமும் வாய்க்கும். முதுமையில் இவை வாயா என்க.
  அணி-நகை.
 

2

  கல்லா மக்கள் காலனை ஒப்பர்
86
மாலினால் இருவரும் மருவி மாசிலாப்
பாலனைப் பயந்தபின் படிப்பி யாதுயர்
தாலமேற் செல்வமா வளர்த்தல் தங்கட்கோர்
காலனை வளர்க்கின்ற காட்சி போலுமே.
  தாய் தந்தையர் அன்பால் கூடிக் குற்றமில்லாத பாலனைப் பெற்றபின் படிப்பிக்கவேண்டும்.படிப்பிக்காமல் உலகத்தில்