பக்கம் எண் :

47

  மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும்
 
 செல்வமாக வளர்த்தல் தங்கள் உயிரைக்கொள்ளும் கூற்றுவனை வளர்ப்பதாகும்.
 மால்-அன்பு. மருவல்-கூடல். மாசு-குற்றம். பாலன்-பிள்ளை. தாலம்-உலகம். காலன்-கூற்றுவன்.
 

3

 சேயர்முன் தீமைசெய் பெற்றோர் தீப்பகை
87
தீதுநன் றறிகிலாச் சேயரென் செய்வார்
கோதற அவரைநன் னெறியிற் கூட்டிடாது
ஏதங்க ளவர்முன்செய் திழிவைக் கற்பிக்குந்
தாதைதாய் புதல்வர்க்குச் சத்து ருக்களே.
 

தீமையும் நன்மையும் தாமாகத் தெரிந்துகொள்ளும் தன்மையில்லாத மக்களைத் தாய்தந்தையர் நல்வழிப்படுத்த வேண்டும். அப்படிச்செய்யாமல் அவர்கள் முன் குற்றமானவற்றைச் செய்து இழிவையே கற்பித்தல் பகைவரின் தீச்செயலாகும்.

 

சேயர்-மக்கள். கோது-குற்றம். புதல்வர்-மக்கள்.

 

4

 படிப்பே பிள்ளைகட்குப் பயன்பெரி தளிக்கும்
88
சுகமுறு வாழ்வில வெனினுந் தோன்றற்குச்
சகமகிழ் கலையறந் தனைப்ப யிற்றுதல்
அகநினைந் ததுதரும் அரத னந்தனை
இகபரம் இரண்டினை யீத லொக்கும்.
 செல்வவளம் குறைவாயிருப்பினும் பிள்ளைகட்கு நன்மையும் மகிழ்வும் தரத்தக்க கல்வியும் நற்பண்பும் பழகச் செய்தல், கருதியது கைகூடச் செய்யும் மணியினை-இம்மை, மறுமை இன்பினை ஈவதொக்கும்.
 சுகம்-செல்வம். சுகம்-நன்மை. தோன்றல்-மக்கள்.
 

5

 கல்வியில் செல்வம் பிள்ளையுயிர்க் காலன்
89
கலைபயிற் றாதுகா தலர்க்கு மாநிதி
நிலையென அளிக்குதல் நெறியில் பித்தர்க்குக்
கொலைசெய்வா ளீவதுங் குழவி தன்னைமா
மலையினோ ரத்துவைப் பதுவும் மானுமே.