பக்கம் எண் :

48

 பிள்ளைகளுக்கு விழுச்செல்வமாங் கல்வியைக் கொடுக்காது பெரும்பொருள் நிலையெனக் கருதிக் கொடுப்பது, முறைதெரியாத கிருக்கருக்குக் கொலைக்கருவியாகிய வாளைக் கொடுப்பதும், பச்சிளங் குழந்தையைப் பெரிய மலைமேல் ஓரத்தில் வைப்பதும் போன்றதாம்.
 காதலர்-பிள்ளைகள். நெறி-முறை. மா-பெரிய. மானும்-போன்றதாம்.
 

6

 தந்தைதாய் துன்பத்தைத் தகையும் பிள்ளைகள்
90
பயிர்களை யெடுத்திடப் பலன ளித்தல்போற்
செயிரினைக் கடிந்துநற் செயல்வி யந்தருந்
தயையொடுஞ் சேயினை வளர்க்குந் தந்தைதாய்
துயருறா வண்ணமத் தோன்றல் காக்குமே.
 

பயிர் களைஎடுத்ததும் செழித்து வளர்ந்து பெரும்பயன் தரும். அதுபோல் பேரன்போடு வளர்க்கும் தந்தைதாய் பிள்ளைகளைக் குற்றத்தினின்றும் விலக்கி நல்ல வழியில் செலுத்துவர். அவர்கள், பெற்றோர் துன்புறாவண்ணம் காப்பர்.

 

பலன்-பயன். செயிர்-குற்றம். வியந்தரும்-செலு. தயை-பேரன்பு. தோன்றல்-பிள்ளை. தகையும்-தடுக்கும்.

 

7

 கல்வியே முறையுயர் வீடு காட்டுமால்
91
நிதிசெல வாய்க்கெடு நீசர் வவ்வுவர்
மதியினை மயக்கிவெம் மறம்வி ளைத்திடுங்
கொதியழல் நரகிடுங் குணமுங் கல்வியும்
விதிதரும் பதிதரும் வீடு நல்குமே.
 கல்லாதவன் செல்வம் வீண் செலவாகும்; தீயவர் கொள்வர்; அறிவைக் கெடுக்கும்; பாவத்தைப் பெருக்கும்; இறுதியில் துன்பவுலகத்து ஆழ்த்தும்; கல்வி நல்லகுணம் தரும்; முறை தரும்; உயர்ந்த நிலை தரும்; கெடாக் கடவுளின்பமும் தரும்.
  நிதி-செல்வம். மறம்-பாவம். பதி-நிலை.
 

8

 கல்லாமை கடிவாளமில் குதிரைஏறல் ஒக்கும்
92
புவிநடை கடவுண்மெய்ப் போதம் அன்பறஞ்
செவியினோ தாதொரு சேயைப் பார்விடல்