| மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் |
| அவியென வூருமா றறிகி லான்றனைக் கவியமில் புரவியைத் தோட்டுங் காட்சியே. |
|
| பிள்ளைகட்கு உயிர்க்கு உறுதிதரும் ஒப்புரவறிதல், கடவுளுண்மை, மெய்யுணர்வு, அன்பு, நன்மை முதலியவற்றைக் காதிலுணர்த்தாது உலகத்தில் விட்டுவிடுதல், மனத்தைப்போல் தாவிச் செல்லும் குதிரையை அடக்கிச் செலுத்த அறியாதவனைக் கடிவாளமில்லாத குதிரையில் ஏற்றி ஓட்டுவதை யொக்கும். |
| புவிநடை-ஒப்புரவறிதல். போதம்-மெய்யுணர்வு. அவி-மனம். (ஆவி என்பது அவி என்றாயிற்று) கவியம்-கடிவாளம். காட்சி-ஒக்கும். |
| 9 |
| பிள்ளைகட்காம் இன்பதுன்பம் பெற்றோர் நடத்துவதால் |
93 | தீயராய் வறியராய்ச் சிலர்வ ருந்தலுந் தூயராய்ச் சிலர்புவி துதிக்க வாழ்தலுந் தாயினால் தந்தையால் சமைந்த தன்மையால் சேயரை நன்னெறிச் செலுத்தன் மேன்மையே. |
|
| சில பிள்ளைகள் கொடியவராய் ஏழைகளாய் வருந்துவதும், சில பிள்ளைகள் நல்லவராய்ச் செல்வராய்ப் புகழுடன் வாழ்வதும் பெற்றோர்கள் பிள்ளைகளை நடத்தும் முறைமையினா லுண்டாவன. |
| 10 |
| நீ.-4 |