பக்கம் எண் :

50

  அதி. 9--மாதரைப் படிப்பித்தல்
  பெண்கட்கும் கல்வியே பெருந்துணை யாகும்
94
கல்வியே அறவழி காட்டும் ஆண்மகன்
செல்வழி யறிந்திடான் வித்தை தேறுமுன்
அல்வளர் கூந்தலார் அறிய நூலின்றி
நல்வழி யுணர்ந்ததில் நடக்கற் பாலரோ.
 

யாவர்க்கும் படிப்பே நல்வழிகாட்டும். ஆண்மகனும் கற்பதன் முன் செல்லும் நல்வழி அறியான். அப்படியிருக்கப் பெண்மகள் நூல்படியாமல் எப்படி நல்வழி யறிந்து நடப்பள்?

 

கல்வி-படிப்பு. வித்தை-கல்வி. அல்-இருள். வளர்-போன்ற. கூந்தல்-தலை.

 

1

  கண்பறித்தலாம் பெண்பால் கல்வி கொடாமை
95
பெண்மகள் கெடுவளென் றஞ்சிப் பெற்றவன்
உண்மைநூ லவட்குணர்த் தாமை தன்மனைக்
கண்மறு புருடரைக் காணு மென்றதை
எண்மையாய்த் தவன்பறித் தெறிதல் ஒக்குமே.
  கற்றால் பெண்மகள் கெட்டுவிடுவாள் என்று பெற்றவன் கல்வி கொடாமலிருப்பது, தன்மனையவள் கண் உடையவளாக இருந்தால் அயலானைக் காண்பாள் என்று கருதிக் கணவன் அவள் கண்ணை எளிமையாகப் பிடுங்குவதை யொக்கும்.
  மறுபுருடன்-அயலான். தவன்-கணவன். எண்மை-எளிமை. பறித்தல்-பிடுங்குதல்.
 

2

  நூலுணர்ந்தார் அயலானை நோக்கவும் அஞ்சார்
96
காவலன் பயத்தினாற் கற்பைக் காக்கின்ற
பாவையர் அரியநூல் பயன்தெ ரிந்திடில்
பாவபுண் ணியநெறி அறியும் பண்பினால்
சீவனீங் கினுமய லாரைச் சேர்வரோ.