பக்கம் எண் :

51

 மாதரைப் படிப்பித்தல்
 
 வேந்தன் காவலுக்கஞ்சிக் கற்பைக் காக்கின்ற பெண்கள், உண்மை நூல் உணர்ந்தால் பாவ புண்ணியங்கட்கு மிகவும் அஞ்சி உயிர் நீங்கினும் கற்பைக் கைவிடார்.
 காவலன்-வேந்தன். அரியநூல்-உண்மை நூல். பாவ புண்ணியம்-தீமை நன்மை. சீவன்-உயிர்.
 

3

 மருந்துபோல் கல்வி பெண் மாண்பு தந்திடும்
97
பொருந்துநற் கலைதெரி பூவை கற்பது
திருந்தியே மிகுமலால் தேய்ந்து போமெனல்
வருந்திடா துயிர்தரு மருந்தை மானிடர்
அருந்திடில் சாவரென் றறைத லொக்குமே.
 

பெண்களுக்கு நாற்பொருளும் பொருந்தும் உண்மை நூல்களைக் கற்பதால் அறிவு வளர்ந்து மிகும் அல்லாது தேய்ந்து போகாது. தேயுமென்று சிலர் கூறுவது, உயிரை வளர்க்கும் மருந்தை மக்கள் உண்ணின் மாள்வர் என்று சொல்வதை யொக்கும்.

 

பூவை-பெண். மருந்து-அமிழ்து.

 

4

 கல்லாப்பெண் நன்னெறி காணகில் லாளே
98
முடவரே நடக்கினும் மூங்கை பேசினும்
திடமொடந் தகர்வழி தெரிந்து செல்லினும்
மடமயி லனையர்நூல் வாசி யாரெனில்
அடமில்நன் னெறிதெரிந் தமையற் பாலரோ.
 கால் இல்லாதவர் நடத்தலும், ஊமையர் பேசலும், குருடர் வழிதெரிந்து செல்லுதலும் ஒரு வேளை நிகழ்ந்தாலும், பெண்கள் நூல் கல்லாவிடின் குற்றமற்ற நல்வழி தெரிந்து நடத்தல் முடியாது.
 மூங்கை-ஊமை. அந்தகர்-குருடர். அடம்-குற்றம்.
 

5

 விளக்கை மறைப்பதாம் பெண்கல்வி விளக்காமை
99
அரிவையர் நேசமும் ஆர அல்லினில்
விரிசுடர் விளக்கென விளங்கு வாரவர்க்கு