பக்கம் எண் :

53

  மாதரைப் படிப்பித்தல்
 
  கல்லாப்பெண் குடும்பழுத்தல் நீந்தறியான் கடலழுத்தல்
102
கலையு ணர்ந்தறி யாதவோர் கன்னியை
உலையு றுஞ்சமு சாரத்தின் உய்க்குதல்
நிலையு ணர்ந்தறல் நீந்தறி யான்றனை
அலைக டற்கண் அமிழ்த்தலை யொக்குமே.
 

கல்லாத பெண்களைத் துன்பமிக்க குடும்பவாழ்க்கையில் செலுத்துதல், ஆறு குளம் நீந்த அறியாதவனைக் கடலினுள் தள்ளுவதை யொக்கும்.

 

உலைவு-துன்பம். அறல்-நீர்.

 

9

  வேறு
  கல்லாப் பெண் உயிர் இல்லா உடலே
103
நல்லறி வேயணி நன்னுத லார்க்கஃது
இல்லவ ரோடுமி யைந்து கலத்தல்
புல்லுயிர் நீங்குபு ழுக்கொள் சவத்தைக்
கல்லுரு வைப்புணர் காம நிகர்த்தே.
  பெண்களுக்கு நல்லறிவே அணிகலத்தினும் மிக்க அழகு தருவது. அவ்வழகில்லாருடன் கூடி வாழ்தல் உயிரற்ற உடலோடும் உணர்வற்ற கல்லுருவோடுங் கூடி வாழ்வதை யொக்கும்.
  அணி-அழகு. நன்னுதலார்-பெண்கள்.
 

10