| அதி. 11--கணவ மனைவியரியல்பு |
| உடலுயிர்ச் சண்டையாம் காதலர் பிணக்கம் |
109 | ஆவியின்றி யுடலில்லை யுடலின்றி யாவியிலை யதுபோற் பத்தா தேவியெனு மிருவர்சேர்ந் தோருருவாஞ் செழுமலருந் தேனும் போல மேவியவ ரிருவருமே நள்ளாது முரண்செய்யில் விளங்கு மெய்யுஞ் சீவனுமொன் றோடொன்று போராடி யழிந்ததொக்குஞ் செப்புங் காலே. |
|
| உயிரில்லாமல் உடம்பில்லை; உடம்பில்லாமல் உயிரில்லை. அது போன்று கணவனில்லாமல் மனைவி யில்லை. மனைவியில்லாமல் கணவ னில்லை. இவ்விருவரும் பூவுந் தேனும் போலச் சேர்ந்து ஓருருவானவர். இவர்கள் ஒற்றுமையாக வாழாது பிணங்குவாரானால், அப்பிணக்கம் உடம்பும் உயிரும் ஒன்றோடொன்று சண்டையிடுவதை யொக்கும். |
| ஆவி-உயிர். பத்தா-கணவங் தேவி-மனைவி. நள்ளல்-சேர்தல். |
| 1 |
| காதலர் ஒற்றுமை கணக்கிலாப் பெரும்பொருள் |
110 | மணியுமொளி யும்போலாண் மகனுமனை வியும்பொருந்தி வாழு வாரேல் பிணியுறுமா துலரெனினும் பெருஞ்செல்வர் நகுலமும்வெம் பெரும்பாம் பும்போல் தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிரற்ற சவத்தின் மீது பணிகண்மிகப் பூட்டியலங் கரித்தலொக்கு மவர்செல்வப் பயன்தா னம்மா.. |
|
| மணியும் ஒளியும்போல் கணவனும் மனைவியும் மனம் பொருந்தி வாழுவாரானால், அவர்கள் நோயுறும் வறியவர்களே |