பக்கம் எண் :

57

  கணவ மனைவியரியல்பு
 
 

எனினும் பெருஞ்செல்வர் ஆவர். இங்ஙனமின்றி கீரியும்பாம்பும் போல் நீங்காப் பகைகொண்டு ஒற்றுமையுறார் எனில், அவர்களின் செல்வப் பயன் பிணத்தின்மேல் அணிகள் பூட்டி அழகு செய்வதை ஒக்கும்.

 

ஆண்மகன்-கணவன். ஆதுலர்-வறியர். நகுலம்-கீரி. தணியாத-நீங்காத. சவம்-பிணம். பணி-அணிகள்; நகைகள்.

 

2

  பெண்களுந் தொழுதெய்வம் பெருங்கற் புடையாள்
111
தந்தைதாய் சோதரருற் றாரையெலாங்
    கைவிடுத்துத் தன்னைச் சார்ந்த
பைந்தொடியை அனையவர்போ லாதரிக்கக்
    கணவனுக்கே பரமாம் ஆதி
அந்தமிலான் முதற்றெய்வம் பதியிரண்டாந்
    தெய்வமென வன்பி னோடு
சிந்தைதனில் நினைந்துருகுஞ் சேயிழைபூ
    வையர்க்கெல்லாந் தெய்வ மாமால்.
  மனைவியானவள் தந்தை தாய், உடன்பிறப்பு, உற்றார் முதலியவர்களைக் கைவிட்டுக் கணவனை அவ்வவர்களாகக் கருதிச் சார்ந்தனள். அதனால் கணவன் மனைவியை அவ்வவர்கள் போல் நின்று காக்கும் பொறுப்புடையவன். முதலும் முடிவுமில்லாத முழுமுதலே முதல் தெய்வம். கணவன் கடவுளாகக் கருதும் இரண்டாம் தெய்வம். கணவனை அன்புடன் நினைந்துருகும் கற்புடைய பென்கள் பெண்களுக்கெல்லாம் தெய்வமாவர்.
  பைந்தொடி-அழகிய வளைய லணிந்த பெண். ஆதரித்தல்-காத்தல். பதி-கணவன். சேயிழை-சிறந்த அனியணிந்த பெண். பூவையர்-பெண்கள்.
 

3

  மணத்தின்பின் குணங்குற்றம் மனங்கொளாது வாழ்க
112
தவனாட்டி யிருவரினற் குணமுளா ரிலரென்னுந்
    தன்மை நோக்கல்
நவமணஞ்செய் முன்னன்றிப் பின்னுன்னிற் பயனுளதோ
    நாவாய் தன்னை