பக்கம் எண் :

58

  நீதிநூல்
 
 
உவராழி நடுவினன் றன்றெனக்கை விடத்தகுமோ
    வுடல்பன் னோய்சேர்ந்து
அவயவங்கள் குறைந்தாலு மதையோம்பா தெறிவாரோ
    வவனி மீதே.
 

தவத்தானமைந்த இருவரிலும் குணம் உள்ளவர் இவர் இல்லாதவர் இவர் என்று ஒருவரை ஒருவர் ஆராய்வது புதுமணம் செய்துகொள்வதற்கு முன்னரேயாம். மணத்தின்பின் ஆராய்வது, கப்பலை நடுக்கடலில் ஆராய்ந்து நன்றன்று எனக் கண்டாலும் விடமுடியாமையும், உடம்பில் நோயும் உறுப்புக்குறைவும் ஏற்பட்டாலும் அவ்வுடம்பை விடமுடியாமையும் போலப் பயனின்றாம்.

 

நவமணம்-புதுமணம். நாவாய்-கப்பல். உவராழி-கடல். அவயவம்-உறுப்பு. ஓம்புதல்-பாதுகாத்தல்.

 

4

  ஒருவரையொருவர் இன்சொலால் நல்வழி உய்க்க
113
கொழுநனா யினுமனையா யினுமியல்பில் லாரென்னிற்
   கூறின் சொல்லாற்
செழுமைநெறி யினிற்றிருப்ப வேண்டுமிதத் தால்வசமாஞ்
   சினவி லங்கும்
அழல்வதினாற் றுன்பமிகு மல்லாது பயனுளதோ
   வருநோ யுற்ற
விழிமிசைநன் மருந்திடா தழற்பிரம்பை விடிலந்நோய்
   விலகுங் கொல்லோ.
  கணவனாயினும் மனைவியாயினும் நல்ல தன்மை யில்லாதவரானால் ஒருவரை யொருவர் இன்சொலால் நல்ல வழிக்குத் திருப்புதல் வேண்டும். கொடு விலங்கும் இனிமையால் கட்டுப்படும். கடுஞ்சொல்லும் கடுஞ்செயலும் எவ்வகைப் பயனையுந் தாரா. நோயுற்ற கணவனுக்கு மருந்தை இடுவதல்லாமல் காய்ச்சிய நெய்யை இடுவார்களா? இட்டால் நோய் நீங்குமா?
  கொழுநன்-கணவன். செழுமை- நெறி-நல்வழி. அழல்-காய்ச்சிய. பிரம்பு-நெய்.
 

5