| கணவ மனைவியரியல்பு |
| எல்லாரினும் சிறந்த கணவனோ டிகலல்பழி |
114 | தந்தைதாய் சோதரரை நீங்கிமின்னா ரொருவன்கை தன்னைப் பற்றிப் பந்தமுற லாலவரெல் லாரினுமிக் குரிமையுளான் பத்தா வன்றோ இந்தநிலை யுணராம லவனையிகல் செயுமேழை யிகப ரத்தை நிந்தையுற வழித்தலால் தன்னைத்தான் கொலைசெய்தல் நிகர்கு மாதோ.. |
|
| தந்தை தாய் உடன்பிறப்பு முதலியவர்களினும் கணவனே பெண்களுக்கு உரியவனாவன். இதனை உணராமல் கணவனுடன் மாறுகொள்ளும் பெண் இம்மை மறுமை நலங்களைப் பழியுண்டாகக் கெடுத்தலால் தன்னைத் தானே தற்கொலை செய்து கொண்டவளாவாள். |
| மின்னார்-பெண்கள். இகல்-மாறுபாடு. நிந்தை-பழி. நிகர்க்கும்-ஒக்கும். |
| 6 |
| செம்மையிலாக் காதலரைச் செம்பொருள் காயும் |
115 | பொய்யான நாடகத்திற் பதிமனைபோல் வேடமுற்றோர் பூண்ட கன்மஞ் செய்யாரேல் நகைக்கிடமா முலகறிய மணவாளன் தேவி யென்ன மெய்யாவுற் றோர்தம்முள் நட்பிலரேல் பிரபஞ்ச விநோதக் கூத்தைக் கையாற்கொண் டாட்டுவிக்கும் பரனவரை யழற்புகுத்திக் காய்வா னம்மா. |
|
| ஊர் நாடகத்தில் பொய்யாகக் கணவன் மனைவியென்று கோலங்கொண்டார் செம்மையாக நடிக்காவிட்டால் எல்லாரும் சிரிப்பர். அதுபோல உலக நாடகத்தில் உண்மையாகவே கணவன் மனைவியரென்ற இருவரும் செம்மையாக ஒழுகல் வேண்டும். இல்லாவிட்டால் உலக நாடகத்தைச் செய்விக்கும் ஆண்டவன் அவர்களைர்த் துன்பத்திற் புகுத்தி வருத்துவன. |