பக்கம் எண் :

60

  நீதிநூல்
 
  பதி-கணவன். அழல்-துன்பம். காய்வான்-வருத்துவான்.
 

7

  மனங்கலவாக் காதலரை வலவன் வருத்தும்
116
பரவசமு சாரமெனும் பண்டியில்வாழ்
     வெனும்பொருளைப் பரப்பிப் பூண்ட
புரவிகள்போல் காந்தனுங்காந் தையுமைந்தார்
     மனமொத்தோர் போக்கை நாடி
விரவொடுமே காரென்னின் ஊர்தியொடப்
     பொருள்விளியும் விண்பு ரக்கும்
பரமனெனுஞ் சாரதியப் பரிகண்மேற்
     சினமுற்றுப் படர்செய் வானே.
  புகழ்ந்து சொல்லப்படும் குடும்பமாகிய வண்டியில் இல்வாழ்க்கை யென்னும் சரக்கை ஏற்றிக் கணவனும் மனைவியுமாகிய இரண்டு குதிரைகளைப் பூட்டி, அக்குதிரைகள் போன்ற இருவரும் மனம் ஒத்துக் (கடவுளையடையும்) குறிக்கோள் ஒன்றை நாடிக் கலந்து இழுத்துச் செல்லாவிட்டால் வண்டியும் சரக்கும் அழியுறும். ஆயின், வண்டியைச் செலுத்தும் வலவன் போன்ற முழுமுதல் குதிரைகளை யொத்த காதலர்மேல் சினமுற்றுத் துன்புறுத்துவன்.
  சமுசாரம்-குடும்பம். காந்தன்-கணவன். காந்தை-மனைவி. போக்கு-குறிக்கோள். ஊர்தி-வண்டி. விளியும்-அழியும். சாரதி-வலவன். படர்-துன்பம்.
 

8

  சிற்றுயிரைப் பார்த்தேனும் ஒற்றுமையன் புறல் சிறப்பு
117
உறவினரெல் லாங்கூடி மணவிழாச் செய்துரியோ
     னுரிமை யென்னப்
பெறலரும்பேர் பெற்றுமொரு வரையொருவர் பேணாரேல்
     பெருமை யென்னோ
அறமறிவி லாவெனினும் விடாநகைப்புற் றாண்பெண்ணும்
     அமைந்து வாழும்
பறவைமிரு கங்களைப்பார்த் தாயினுநன் னேயமன்னோர்
     பயிலல் நன்றே.