| கணவ மனைவியரியல்பு |
| உறவினர் ஊரவர் எல்லாம் ஒன்றுகூடி மணவிழாக்கொண்டாடி ஒருவருக்கொருவர் உரிமையாக்கப் பெற்ற இருவரும் (காதலர்) ஒருவரையொருவர் பேணி வாழவேண்டும். அங்ஙனம் வாழப் பயிலாதார் அறமும் அறிவும் இன்னதென்றறியாத விலங்கும் புள்ளும் ஆணும் பெண்ணுமாகக் கூடி நீங்காமகிழ்வுற்று வாழ்வதைப் பார்த்தேனும் அன்புறப் பழகுவது நன்மையாம். |
| நகைப்பு-மகிழ்வு. அமைந்து-பொருந்தி. |
| 9 |
| கற்பிலாள் தாலி கழுத்துறு சுருக்கே |
118 | தாங்குபொருள் சுட்டழித்துத் தானுமழி யுங்கனல்போல் தலைவ னெஞ்சைத் தீங்குகளாற் சுடுமனைவி தன்வாழ்வைக் கெடுத்தலால் செழுங்கண் டத்தில் தூங்குதிரு நாணினா லென்னபய னதைக்கழுத்திற் சுருக்கிக் கொண்டு தேங்குமுயிர்ப் பொறைநீக்கில் பூமகடன் பெரும்பொறையுந் தீரு மன்றே. |
|
| தீ தனக்குப் பற்றுக்கோடாகிய விறகு முதலிய பொருள்களைச் சுட்டழித்துத் தானும் அதனுடன் மாய்வதுபோல், மனைவியும் தனக்குப் பற்றுக் கோடாகிய கணவன் உள்ளத்தைப் பழி பாவங்களால் சுட்டழித்து உடன் தானும் அழிவள். அத்தகைய பெண் கழுத்தில் தாலி தொங்கவிடுவதால் மட்டும் பயனென்ன? அதைவிட அத்தாலிக்கயிற்றையே கழுத்துச் சுருக்காகக் கொண்டு உயிர்விடுதல் நன்மை. அதுமட்டுமன்று; நிலத்துக்கும் சுமை நீங்கும். |
| கனல்-தீ. திருநாண்-தாலி. பூமகள்-நிலம். பொறை-சுமை. |
| 10 |
| உழைப்பால் தளர்மனையை ஓம்பல் பெருங்கடன் |
119 | அனைதந்தை இல்லத்துஞ் சுகமில்லை நமக்குரிய ளான பின்னர் மனைதாங்கல் சூதகஞ்சூல் சேய்பெறுதல் வளர்த்தலொடு மாமன் மாமி |
|