| நெஞ்சே! மனைவி நமக்குரியவளானபின், அவளுக்குத் தன் தாய் தந்தையரில்லத்தும் இன்பம் இல்லை. நம் வீட்டிலும் மனையறம் பேணல், கருத்தாங்கல், மகப்பெறுதல், வளர்த்தல், மாமன் மாமியாரையும் பாதுகாத்தல், விருந்தோம்பல், நமக்கு வேண்டுவன செய்தல் முதலியவற்றால் தளர்ந்து மெலிந்து வருந்தும் வருத்தம் மிகுதி. ஆதலின், அவளைப் பேரன்புடன் துணைநின்று இன்புறச்செய்ய வேண்டுவது நம் கடன். |