பக்கம் எண் :

63

  கணவ மனைவியரியல்பு
 
  எப்பணிசெய் தாலுமில்லாள் எழிற்கணவன் நினைப்பொழியாள்
121
வினைப்பகைநீர் பெரியரில்வாழ் வினிற்கலந்து நின்றாலும்
    வேத நாதன்
தனைப்பரவி நினைத்தலென்றும் ஒழியார்போல் கற்பின்மிக்க
    தைய லார்தம்
மனைப்பணிகள் செய்தாலுந் துயின்றாலுங் கனவினுந்தம்
    மணாளர் மாட்டு
நினைப்பொழியார் கணவருடன் அவர்மனமொன் றாய்க்கலந்து
    நிற்கு மாதோ.
 

மலமற்ற பெரியோர் மனைவாழ்வு நடத்தினும் தொழுங்கடவுள் நினைவாகவே இருப்பர். அதுபோன்று கற்புடைய மனைவி, மனைக்கடன் செய்தாலும், உறங்கினாலும், விழித்தாலும் கணவன் நினைவாகவே இருப்பள். இருவர்மனமும் ஒன்றாகவே இருக்கும்.

 

வேதநாதன்-கடவுள். வேதம்-கடவுள் நூல். தையலார்-பெண்கள்.

 

13

  இணைபிரியா திருக்கநல்கும் இடம்பொருள் பேரின்பே
122
ஏந்தலாந் தந்தைத்தாய் சகியர்கோ யிலைவிட்டோ
     ரெளியர் சிற்றில்
சார்ந்தனனென் றிகழுமின்னே சிற்றில்லா லவரருகே
     தங்கப் பெற்றேன்
சேர்ந்தமிடி யாலவர்தம் பணியாவும் என்கையாற்
     செய்யப் பெற்றேன்
பாந்தவமீ தின்றியெந்தை அன்னையைவே றாக்குநிதி
     பாழ்த்த தன்றோ.
  பெருமை மிக்க தந்தை தாயாரைத், தோழியரை, ஈன்றார் பேரில்லை விட்டு ஓர் எளியாருடைய சிறிய வீட்டைச் சார்ந்தேன் என்று குறை சொல்லும் தோழியே! சிறு வீடாக இருப்பதால் எப்பொழுதும் அவரருகிலேயே தங்கியிருக்கின்றேன். வறுமையினால் கணவனுக்கு வேண்டும் எல்லாப் பணிகளும் யானே என்