பக்கம் எண் :

64

  நீதிநூல்
 
  கையால்செய்கின்றேன். இவையே சிறந்த தவமாகும். பேரில்லும் பெரும்பொருளும் உடைத்தாயிருப்பதால் எந்தையும் எம்மன்னையும் எப்பொழுதும் ஒன்றாக இருக்க இயலவில்லை. வேறுபடுத்திப் பயனில்லாமல் செய்யும் பொருள் சிறந்ததா?
  ஏந்தல்-பெருமை. கோயில்-பேரில்; மாளிகை. மிடி-வறுமை. பா-அழகு; சிறப்பு. பாழ்தல்-பயனில்லாமற் போதல்.
  14
  துணைவனுடன் வாழ்வதே சொல்லொணாப் பேரின்பம்
123
முதல்வியிவ டுணைவனே தெய்வமென்றா ளவன்சிற்றில்
     மோக்க மென்றாள்
அதிலவனோ டுறைதல்சா லோகசா மீபமென்றாள்
     அவன்கை தீண்டி,
மதமொடுமே யடித்தல்சா ரூபசாயுச் சியமென்றாள்
     மயற்பேய் கொண்டாள்
பதவியெலா மீன்றோர்பா லிருக்கநண்ப னொடுமெலிந்தாள்
     பசிநோ யுற்றே...
 

பெற்றோர் வீட்டில் எல்லா நலங்களுமிருக்கத் துணைவனுடன் கூடிவாழ்தலால் மெலிவும் பசியும் எய்திய தலைவியானவள் தன் துணைவனே தெய்வம்; அவன் வாழும் சிறு வீடே பேரின்பப் பெருவீடு. அவ்வீட்டில் அவனுடன் ஒற்றித்து வாழ்வதே சாலோக சாமீபம். அவன் கையைப் பற்றி மகிழ்ச்சியோடு இன்புறுவதே சாரூப சாயுச்சியம்; என்று மயங்குங் கொள்கையளானாள்.

 

மதம்-மகிழ்வு. அடித்தல்-இன்புறுல், விளையாடல். மயல்-மயக்கம்.

 

15

  வேறு
  காரிகைசெய் அழகெலாம் கணவன் கண்டுவக்க
124
உண்ணல்பூச் சூடனெஞ் சுவத்த லொப்பனை
பண்ணலெல் லாமவர் பார்க்க வேயன்றோ
அண்ணறன் பிரிவினை யறிந்துந் தோழிநீ
மண்ணவந் தனையிது மடமை யாகுமே.