பக்கம் எண் :

65

 கணவ மனைவியரியல்பு
 
 தோழீ! உண்டல் பூச்சூடல் மனமகிழ்தல் அழகு செய்தல் முதலியன துணைவன் கண்டு களிப்பதற்கே. அவன் இல்லாதபோழ்து எனக்கு அழகு செய்யவருகின்றனையே, அஃது அறிவுடைமையாகுமா?
 ஒப்பனை-அழகு. அண்ணல்-வாழ்க்கைத்துணைவன்; கணவன். மண்ணல்-அழகு செய்தல்.
 16
 மனைமுகத் தாமரை மலரும் கணவனால்
125
கதிரவ னனையதங் கணவ ரேர்முகம்
எதிருற மலருமற் றேதி லார்முக
மதியநோக் கிடவிதழ் வாடிக் கூம்புமால்
சதியர்வாண் முகமெனுஞ் சலசப் பூவரோ.
 மனைவியர் முகமாகிய தாமரை கணவர் முகமாகிய அழகிய கதிரவனைக் கண்டுதான் மலரும். அயலார் முகமாகிய திங்களைக் கண்டு குவியும்.
 சதி-மனைவி; கற்புடையவள். வாள்-ஒளி. சலசப்பூ-தாமரை.
 

17

 அரசும் அரசுறுப்பும் ஆம்நற் கணவனே
126
மிடியுளார் கேள்வரென் றுரைத்த மின்னனாய்
கடிநகர் சிறுகுடில் காந்தர் வேந்தராம்
அடியளே குடியவ ரன்பெண் செல்வமாங்
குடியிறை யென்னிறை குறையுண் டோசொலாய்.
 கணவர் வறுமை யுள்ளவர் என்று சொல்லும் தோழியே! அவருடைய சிறு வீடே சிறந்த அரண்மனை. அவரே அரசர்க்கரசர். அடியாளாகிய யானே குடி. அவர் அன்பே எண்பெரும் செல்வம். என்னுடைய கற்பே அவர்க்கு நல்கும் வரி. வேந்தற்கு வேண்டியவற்றுள் வேறென் குறைவுண்டு சொல்லாய்.
 மிடி-வறுமை. கடி-சிறப்பு. நகர்-அரண்மனை. இறை-வரி. நிறை-கற்பு. வேந்தன்-மன்னர் மன்னன்.
 

18

 கணவனுறை நெஞ்சில்வேறு கருத இடம் ஏது
127
தோழிகேளுனக்குமோர் துணைவ னுண்டவன்
வாழித யத்தினான் மற்ற மாதரைப்
பாழினினினைக்கின்றாய் பாவி நெஞ்சுனக்கு
ஆழிசூ ழுலகினில் அனந்த மேசொலாய்.
 நீ.-5