| | நீதிநூல் |
| | தோழியே! உனக்கும் ஒப்பில்லாத கணவன் ஒருவன் உண்டு. அவன் உன் உள்ளத்து உறைகின்றான். வீணில் மற்றைய பெண்களைப்போல் நினைக்கின்றாய். உன் கணவன் உறையும் நெஞ்சல்லாமல் வேறு நெஞ்சும் உனக்கு உண்டோ? சொல். |
| | ஓர்-ஒப்பில்லாத. வாழ்தல்-உறைதல். இதயம்-நெஞ்சு. பாழ்-வீண். ஆழி-கடல். அனந்தம்-பல. |
| | 19 |
| | பொருள்தேடப் போங்கணவனுடன் போம் நெஞ்சுயிர் |
| 128 | இங்கிரு பொருள்வயி னேகுவே னென்றீர் தங்குவ துடலொன்றே தளர்நெஞ் சோடுயிர் அங்குறு நாசமே யபல மெய்யிதன் பங்கதாம் அழிவுநும் பங்க தாகுமே. |
|
| | (தலைவ! நீர் என்னை) ழுஇங்கிரு பொருள் தேடப் போகின்றேன்,ழு என்று சொல்கின்றீர். இங்குத்தங்குவது உடலொன்றே. என் நெஞ்சும் உயிரும் உம்முடன் அங்குவரும். வலுவில்லாத வெற்றுடல் அழியும். அவ் அழியும் உம்மைச் சார்ந்ததேயாகும். |
| | நாசம்-அழிவு. பங்கு-சார்பு. |
| | 20 |
| | கணவனை அகலாக் கற்பினள் எதற்கும் கலங்காள் |
| 129 | விரியுல கழியினு மிறைகள் சூழினுஞ் சுரிகுழல் கற்பினார் துணைவ னேயமும் பிரிவிலா வாழ்க்கையும் பெறுவ ரேலவர் பரிவெலாம் இரவிமுன் பனியின் நீங்குமே.. |
|
| | விரிந்த உலகம் அழிந்தாலும், பெருந்துன்பம் நேர்ந்தாலும் கற்புடைய மனைவி கணவன் அன்பும் அவனைப் பிரியா வாழ்க்கையும் பெறுவாளேயானால், துன்பங்களெல்லாம் ஞாயிற்றின் முன் பனிபோல் நீங்கிவிடும். |
| | மிறை-பெருந்துன்பம். சுரி-சுருண்ட. குழல்-கூந்தல். (தலைமயிர்) |
| | 21 |