பக்கம் எண் :

67

  கணவ மனைவியரியல்பு
 
  தலைவன் பின் தூதாய்த் தலைவியுயிர் சாரும்
130
தினைவினை செயவகல் செல்வ முன்னந்தூது
அனம்வரும் அதினொடும் அடைகி லாயெனின்
மனம்வரும் உயிர்வரும் வராத மெய்விலங்கு
இனமுறு வனமுறும் இனம்வ ருந்தவே.
  நாள்தோறும் செய்யும் முயற்சிக் (பொருள்ஈட்டுதல்)காகச் செல்லும் தலைவ! (நீ சென்றால்) முதல் முதல் அன்னந்தூதாக வரும். அவ்வன்னத்துடன் நீ வராவிட்டால் என் நெஞ்சும் வரும்; உயிர்வரும். ஆனால், வர இயலாத உடம்பு நரி முதலிய விலங்கினஞ் சாரும் சுடுகாட்டையும். உறவினர் வருந்துவர்.
  தினவினை-நாள்முயற்சி. அனம்-அன்னம் (அனம் இடைக்குறை). மெய்-உடம்பு. வனம்-சுடுகாடு. இனம்-உறவினர்.
  22
 

வேறு

 

மணமகன் உடலுயிர் மனைவியின் உடைமை

131
இந்த வுடலுள மைம்பொறி யின்னுயிர்
    யாவுமணஞ் செயும்
அந்தநன் னாளினில் இல்லவட் கன்போ
    டளித்தனன் யான்பொதுப்
பைந்தொடி யேயுனைச் சேர்ந்திடப் பாரி லெனக்
    குடல் வேறிலை
சிந்தை புலன்களும் வேறிலை சீவனும்
    வேறிலை செல்வையே.
 

பொதுமகளே! உன்னைச் சேர உடல் உள்ளம் ஐம்புலன் உயிர் எனக்கு வேறில்லை. ஏனென்றால், மணஞ் செய்த காலத்து அவையாவும் மனையவட்கு அளித்துவிட்டேன்.

 

சிந்தை-உள்ளம்.

  23
  *கண்டுகேட். திருக்குறள். 1101