பக்கம் எண் :

68

 நீதிநூல்
 
 வேறு
 நெடுவழித் துன்பெலாம் நீங்கலவர் புன்னகையால்
132
அந்தநாள் நடந்திலாத யானகன்ற நெடுவழி
எந்தவாறு சென்றதென்ன எனைவினவு சிலதிகேள்
பந்தவூர்தி யேறியே படர்ந்தனன் படர்ந்தநாள்
வந்தபீழை யாவும் அன்பர் மந்தகாசந் தீர்ந்ததே.
  தோழி! நடக்க அறியாத யான் நெடுவழியை எப்படி நடந்தேனென்று வினவுகின்றாய். காதலாகிய வண்டி ஏறி நடந்தேன். நடந்ததால் ஏற்பட்ட துன்பமுற்றும் காதலர் புன்னகையால் நீங்கிற்று.
 சிலதி-தோழி. பந்தம்-காதல். ஊர்தி-வண்டி. படர்தல்-நடத்தல். பீழை-துன்பம். மந்தகாசம்-புன்னகை.
 

24

 

    அருவொப்புக் கழுதவள் உருவப்பேர்க் குயிர்விடும்

133
திருவனா யெனப்புகழ்ந்து தேவியை விளிக்கமா
மருமலர் துறந்துநெஞ்சின் வாழ்ந்ததென்னென் றழுதனள்
அருவமாதை யொப்புரைக்க வழுதுவாடு நங்கையாம்
உருவமாதர் பெயருரைக்கி னுயிர்துறப்பள் நெஞ்சமே.
 

நெஞ்சே! திருமகளை ஒப்பாய் என்று மனைவியைப் புகழ்ந்து அழைத்தேன். அவள், செந்தாமரையை விட்டுத் திருமகள் உம்முடைய நெஞ்சில் எப்படி வாழ்ந்தாள், என்று அழுதாள். அருவ மாதரை ஒப்பாய் என்னும் சொல்லையே பொறாதவள், உருவுடைப் பெண் பெயரைச் சொன்னால் திட்டமாக வுயிரைத் துறப்பள்.

 
திரு-திருமகள் (இலக்குமி). தேவி-மனைவி. விளிக்க-அழைக்க. மா-திருமகள். மலர்-தாமரை.
 25
 கணவனல்லா ஆண்களைக் காணக்கண் ணிலாள்மனை
134
பூணலங்கன் மார்பினாரை யன்றிவேறு புருடனைக்
காணநோக்கி லேனினைந்து கழறநெஞ்சு வாயிலேன்
பாணவேறு பொறியிலேனை நடனம்பார்க்க வாவெனா
நாணமின்றி யேயுரைத்த நண்பர்வம்ப ரேகொலாம்.