| | கணவ மனைவியரியல்பு |
| | பாணனே! தலைவனையன்றி வேறு ஆண்களைக் காணக் கண்ணிலேன்; நினைக்க நெஞ்சிலேன்; பேசவாயிலேன்; வேறு பொறியில்லாத என்னைக் கூத்துக் காண அழைக்கும் தலைவர் நாணமில்லாத வம்பராவர். |
| | 26 |
| | வேறு |
| | சீரிய கற்பால் சித்திரமும் பாரார் |
| 135 | ஓவியர்நீள் சுவரெழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான் தேவியையா மழைத்திட ஆண் சித்திரமேல் நான்பாரேன் பாவையர்தம் உருவெனின்நீர் பார்க்கமனம் பொறேனென்றாள் காவிவிழி மங்கையிவள் கற்புவெற்பின் வற்புளதால். |
|
| | சுவரின்கண் எழுதப்பட்ட சித்திரத்தைப் பார்க்கவேண்டுமென்று யான் மனைவியை அழைத்தேன். அவள், `ஆண் ஓவியமானால் நான் பாரேன்; பெண் உருவ மென்றால் நீர் பார்க்க யான் மனம் பொறுக்கமாட்டேன்,ழு என்று கூறினாள். அவளுடைய கற்பு மலைபோன்ற திண்மையுடையது. |
| | ஓவியர்-சித்திரம் எழுதுவோர். ஓவியம்-சித்திரம். கண்ணுறுவான்-பார்க்கும் பொருட்டு, காவி-நீல மலர், வெற்பு-மலை. |
| | 27 |
| | அன்பர்பொருட் ககலுதலால் அக்காளென் பதுதகும் |
| 136 | திருவென்ன வெனைநினையார் சீர்கேடி யெனநினைந்து பொருள்வயினே கிடச்சீவன் போல்வாரே யுன்னுதலால் ஒருதரமோ பலதரநீ ஓஅக்காள் அக்காளென்று இருவினையேன் றனையழைத்த விழுக்கன்று பைங்கிளியே. |
|
| | | பசுங்கிளியே! உயிர் போன்ற காதலர் என்னைத் திருமகள் என்று நினையாமல், அவளுக்கு மூத்தவளாகிய மூதேவி யென்று கருதிப் பொருள் தேடச்செல்ல நினைக்கின்றார். அதனால் நீ கொடுவினையேனை அக்காள் அக்காள் என்று, பலமுறை அழைப்பனால் குற்றம் ஒன்றும் இல்லை. |
|
| | திரு-திருமகள். பொருளருளும் தெய்வம். சீர்கேடி-தேவி. உன்னுதல்-நினைத்தல், அக்காள்-மூதேவி, இருவினை-காடுவினை. |
| | 28 |