பக்கம் எண் :

70

  நீதி நூல்
 
 

கணவனே மனைவியின் காப்புயிர் ஆகும்

137
நள்ளிரவில் தமயந்தி நளன்றனையே பிரிந்தபின்னுந்
தெள்ளுயிர்நீங் கிலளென்னச் சேடிநீ பொய்யுரைத்தாய்
உள்ளுயிரே பத்தாவா வுடையகற்பி னார்க்கவன்றான்
தள்ளியகன் றால்வேறு தனியுயிரே துரையாயே.
  நடு இரவில் நளன் தமயந்தியைப் பிரிந்தனன். நளன்பிரிந்த பின்னும் தமயந்தி உயிர் விடவில்லையே என்று தோழி நீ பொய்யுரைக்கின்றாய். கற்புடைய பெண்களுக்குக் கணவனே உள்ளுயிர். அக் கணவன் தானே பிரிந்துபோனால் மனைவி உயிர் விடுவதற்கு அவளுக்கு வேறாகத் தனியுயிர் ஏது? சொல்லுவாயாக.
  நள்ளிரவு-நடுஇரவு. சேடி-தோழி. பத்தா-கணவன்.
 

29

  கற்புடையார் மன்னன்கை வாளுக்கும் அஞ்சார்
138
நரபதிநீ யானாலு நண்பரின்பா தத்துகட்குன்
சிரமகுட நிகராமோ சேர்கிலையேல் கொல்வனெனக்
கரவாளை யுருவிநின்றாய் கற்பினுக்கோர் குறைவின்றித்
தரமாநீ யெனைக்கொல்லிற் றந்தைதாய் குருநீயே.
  மன்னவன் நீயானாலும் என் தலைவன் திருவடித்தூளுக்கு உன் தலைமேற்காணும் மணிமுடி ஒப்பாகாது. உன்னை யான் சேராவிட்டால் கொல்லுவேன் என்று கைவாளை உருவி நின்றாய். என் உயிரினும் சிறந்த கற்புக்கு ஒரு குறைவு நேராமல் என்னைக் கொன்றுவிட்டால், நீயே தந்தை தாய் குரு முதலிய துணைவர்கள் ஆவாய்.
  நரபதி-மன்னன். நண்பர்-தலைவர். சிரம்-தலை. மகுடம்-முடி. கரம்-கை.
 

30

  இன்ப துன்பம் இருவருக்கும் ஒன்றே
139
அன்பருண்ணில் என்பசிபோம் அவர்களிக்க யான்களிப்பேன்
துன்பமவ ருறில்யானுந் துன்புறுவேன் ஆதலினால்
என்படல்வேறெனினுமெமக்கின்னுயிரொன் றெனவறிந்தேன்
பின்பவர்தாம் என்னைவிட்டுப் பிரிவதெவ்வா றுரைசகியே.