பக்கம் எண் :

71

  கணவ மனைவியரியல்பு
 
  தோழியே! காதலர் உண்டால் என் பசிநீங்கும். அவர் மகிழ்ந்தால் யான் மகிழ்வேன். அவர் துன்புற்றால் யான் துன்புறுவேன். அதனால் எலும்பாலாகிய உடம்பு வேறாக இருந்தாலும் அதனுள் இருக்கும் இனிய உயிர் ஒன்றேயாம். அம்முறையால் தலைவர் என்னை விட்டுப் பிரிவது எப்படி?
  அன்பர்-காதலர். களிப்பு-மகிழ்வு. சகி-தோழி.
 

31

  நாற்குணமே நல்லணியாம் நாதன் மகிழ்வே நகையாம்
140
பொன்னகையி லாயெனச்சொல் பொற்றொடியே பரத்தையர்க்கே
அந்நகைக ளுரியவையா மச்சநாண் மடம்பயிர்ப்பும்
இன்னகையாங் கற்பினர்க்கு மேதினியுள் நீசொலுமப்
புன்னகையு நண்பரினோர் புன்னகைக்கு நிகராமோ.
  தங்கத்தாலாகிய அணிகலன்கள் இல்லையென்று சொல்லும் தோழியே! தங்க நகைகள் விலைமகளிர்க்கே உரியன. குலமகளிராகிய எமக்கு, அன்பு காரணமாகத் தோன்றும் நடுக்கமும், மனஒடுக்கமும், அடக்கமும், கூச்சமும் ஆகிய நான்குமே அழியாத இனிய நகைகளாகும். உலகத்துள் நீ சொல்லும் அந்த இழிவான நகைகள் காதலர் கனிந்துகாட்டும் புன்முறுவலுக்கு ஒப்பாகுமோ?
  பரத்தையர்-விலைமகளிர். புன்நகை-இழிந்த அணிகலன். புன்நகை-குறுஞ்சிரிப்பு. நிகர்-ஒப்பு.
 

32

  கணவரை நீங்கில் கற்புடையார் வாழார்
141
செழுமுளரி புனல்நீங்கில் செழிக்குமோ படர்கொடிகள்
கொழுகொம்பை பிரியின்வளங் கொண்டுய்யு மோகணவர்
அழுதயர வைதாலும் அரந்தைபல இயற்றிடினுந்
தொழுதகுகற் புடையார்தன் துணைவரைவிட் டகல்வாரோ.
  செழித்த தாமரை தண்ணீரைவிட்டு நீங்கினால் செழிப்பை இழக்கும். படர் கொடிகள் கொழு கொம்பைப் பிரிந்தால் வளங்கெடும். அவை போன்று கணவர் அழும்படியாகத் திட்டித் துன்பம் பல செய்தாலும் கற்புடையார் கணவனைப் பிரிந்தால் வாழார். அதனால், கற்புடையார் கணவனைவிட்டு நீங்கார்.
 

முளரி-தாமரை. புனல்-தண்ணீர். அரந்தை-துன்பம். துணைவர்-கணவர். அகலார்-நீங்கார்.

  33