| நீதி நூல் |
| காதலர் நெஞ்சுயிர் மாறிக் கலந்தன |
142 | பேதைமதி யுற்றனையென் றெனையிகழும் பெருந்தகையென் காதலியைப் பிரிந்ததிந்தக் காயமொன்றே உயிருநெஞ்சும் மாதவள்பா லுறையுமன்னாள் மனமுயிரென் பாலுறையும் ஆதலினான் பேதைமதி ஆயினனென் பதுநிசமால். |
|
| அறியாமையை அடைந்தேன் என்று என்னை இகழும் பாங்கனே! காதலியைவிட்டு நீங்கியது இவ்வுடம் பொன்றே, என் உயிரும் உள்ளமும் காதலியின்பால் உறைகின்றன. அவளுடைய உயிரும் உள்ளமும் என்பால் உறைகின்றன. அதனால் நான் பெண்ணறிவினேன் என்று நீ சொல்லுவது மெய்ம்மையே. |
| பேதைமதி-அறியாமை. பெருந்தகை-பாங்கன். காயம்-உடம்பு. பேதைமதி-பெண்ணறிவு. ரூசம்-மெய்ம்மை. |
| 34 |
| தலைவி தலையசைப்பால் தலைவற்காம் பெருமிதம் |
143 | உரனொடுமா மதுகையினை யுலகமெலாந் துதித்தாலும் பெருமிதங்கொள் ளேமறியாப் பேதையெனு நந்துணைவி ஒருசிரக்கம் பிதஞ்செய்யின் உடலெலாம் பரவசமாம் பருவமதிற் சிறியாளிவ் வசியமெவண் படித்தனளால். |
|
| (தோழனே!) நம்முடைய அறிவின் திண்மையையும், உடல் வலிமையையும் உலகோரெல்லாம் போற்றிப் புகழ்ந்தாலும் யாம் உள்ள மகிழ்வு கொள்ளேம். நம் துணைவியாகிய அறியாச் சிறு பருவத்தினள் ஒருமுறை (நம்மை வியந்து) தலையசைத்தால் நம் உடம்பெல்லாம் மகிழ்ச்சியால் அவள் வயப்பட்டுவிடுகின்றது. இச்சிறு பருவத்துள் பிறரைத் தன் வயப்படுத்தும் தன்மை எங்குப் படித்தனள். |
| உரன்-அறிவின் திண்மை. மதுகை-உடலின் வன்மை. பெருமிதம்-உள்ள மகிழ்வு. சிரக்கம்பம்-தலையசைத்தல். வசியம்-வயப்படுத்தல். |
| 35 |
| படம்வேண்டாள் என்றென்றும் பக்கமுறைவே வேண்டும் |
144 | என்னுருவைப் படத்தெழுதி யிதுநானே பேதமிலை நன்னுதலே யிதைக்கோடி நல்கெனக்கு விடையென்ன அன்னதுநீ ரேயாயிற் பொருளீட்ட வதுசெல்க மன்னியிவ ணுறைமினென்றாள் மறுசெயல்யா தறியேமால். |
|