| கணவ மனைவியரியல்பு |
| (தோழனே) என்னுடைய உருவைப் படமெழுதி நல்ல நெற்றியையுடைய காதலியே இப்படத்துக்கும் எனக்கும் ஒரு சிறிதும் வேறுபாடில்லை; இதைப்பெற்றுக்கொள். எனக்கு விடை கொடு என்று சொன்னேன். (அவள்) அப்படம் நீரேயானால் பொருளீட்டுதற்கு அப்படமே போகட்டும், நீர் இங்கேயே நிலைத்துத் தங்கியிருமென்று கூறினாள். வேறு என்ன செயல் செய்வது என்று புரியவில்லை. |
| பேதம்-வேறுபாடு. நன்னுதல்-நல்ல நெற்றியையுடைய காதலி. மன்னி-நிலைத்து. |
| 36 |
| அன்புடையர் பொருள்சுற்றம் அவரேபோல் காக்க |
145 | வேதனன்ப ரவற்குரிய விமானமுதல் யாவையுமிக்கு ஆதரமோ டோம்புவரா லார்வலன்பா லன்புடைய மாதரவ னனைதந்தை தமர்மாட்டும் அன்புறுவார் காதலியின் தமரிடத்துக் கணவனுமத் தன்மையனால். |
|
| கடவுளடியார் அவருடைய திருக்கோவில் முதலிய பொருள்களைப் பேரன்புடன் பாதுகாப்பர். அதுபோல், கணவன்பால் அன்புடைய பெண்கள் அவனின் தாய்தந்தை சுற்றத்தாரிடத்தும் அன்பு செய்வர். கணவனும் மனைவியின் தாய்தந்தை சுற்றத்தாரையும் அன்புடன் பாதுகாப்பன். |
| வேதன்-கடவுள். விமானம்-திருக்கோவில். ஆர்வலன்-அன்புடையவன்; கணவன். காதலி-மனைவி. |
| 37 |
| பயிலுமிடம் நோக்கிப் பரிவாள் தலைவி |
146 | போனவர்தா மிருக்குமிடம் புசிக்குமிடம் துயிலுமிடம் மானனையாள் நோக்குபுநோக் குபுவருந்தும் வல்லேகென்று ஈனமில்நா ளைத்தொழுமன் னேகும்வழி பார்த்தழுமால் மானவர்சென் றொருதினமே மறுதினம்போம் வகையெவனால் |
|
| (தோழீ) மான்போன்ற நோக்கமுடைய தலைவி பொருள் தேடச் சென்ற தலைவர் வழக்கமாக இருக்குமிடம் உண்ணுமிடம் உறங்குமிடம் முதலியவற்றைப் பார்த்துப் பார்த்து வருந்துகின்றாள். குற்றமற்ற பகற்பொழுதைக் கைகூப்பித் தொழுது `விரைவாகச் செல்கழு என்கின்றாள். தலைவர் பிரிந்து சென்ற வழியை நோக்கி அழுகின்றாள். தலைவர் சென்ற நாள் இன்று ஒருநாளே; நாளையாகிய மறுநாள் எங்ஙனம் கழியும்? |