| நீதி நூல் |
| நோக்குபு-பார்த்து. வல்-விரைவாக. ஈனமில்-குற்றமற்ற. நாள்-பகல். மானவர்-தலைவர். எவன்-எங்ஙனம் கழியும். |
| 38 |
| உடலுயிர்க்காம் இருதலைவர்* எவர்க்குமுளர் உண்மையே |
147 | கேள்வரிலா விடத்தொர்பிழை செயினறியா ரெனக்கிளக்கும் வாள்விழியென் றுகத்துறையு மகிழ்நரிரு வரிலொருவர் மூள்வினையாற் பிரியினுமற் றொருவர்சக முழுதுநிறை கோள்வினையா ரவரறியாச் செயலுளதோ கூறுவையே. |
|
| வாள்போலும் கண்ணையுடைய தோழி! தலைவரிலாத விடத்து ஒரு பிழை செய்தால் அவர் அறியமாட்டார் என்று சொல்லுகின்றாய். என்னுடைய உள்ளத்தில் தலைவர் இருவர் உறைகின்றார்கள். அவர்களுள் ஒருவர் உடல் தலைவர். மற்றொருவர் உயிர்த் தலைவர். உடல் தலைவர் முயற்சியின் பொருட்டுப் பிரிந்தாலும் உயிர்த்தலைவர் உலகு எங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் கொள்கையினை யுடையர். அவர் அறியாச் செயல் உண்டோ? கூறுவாயாக. |
| கேள்வர்-தலைவர். கிளக்கும்-சொல்லும். மகிழ்நர்-தலைவர். மூள்வினை-ஊக்கத்துடன் முற்படுந் தொழில். சகம்-உலகம். கோள்-கொள்கை. |
| 39 |
| உயிர்த்தலைவர் படைத்தளிக்கும் ஒப்பில் முழுமுதல்வர் |
148 | இருதுணைவர் தனக்குளரென் றிறைவிசொல ஐயமுற்றிங் கொருதுணையான் அறிகுவன்மற் றொருதுணையா ரெனவினவப் பெருமகனை யுன்னையென்னைப் பேரண்டங் களையமைத்தான் தருமநிலை மூர்த்தியென்றாள் சதியிவட்கோர் குறையுளதோ. |
|
| தலைவி தனக்கு இருவர் தலைவர் உளர் என்று சொன்னாள். தோழி ஐயமுற்றுத் தலைவியே! ஒரு துணைவரை யானறிவேன், மற்றொரு தலைவர் யார் என்று வினவினாள். தலைவி, தோழியே நம்தலைவரை உன்னை என்னை இந்தப்பேர் அண்டங்களைப் பேரருளால் படைத்துக் காக்கும் அறவாழி அந்தணனான ஆண்டவன் என்றாள். இத்தகைய மெய்யறிவு படைத்த நம் தலைவிக்கு என்ன குறையுளது? (ஒன்று மின்று.) |
| *ஆங்கவன்றன், 12. காரைக்காலம்மையார் 14 |