| கணவ மனைவியரியல்பு |
| துணைவர்-தலைவர். இறைவி-தலைவி. ஐயம்-தடை; துணிவின்மை (சந்தேகம்). பெருமகன்-தலைவன். தருமம்-அறம். சதி-தலைவி. |
| 40 |
| வேறு |
| மனையவள் நகைப்பஞ்சிவாள் வெல்லலே வலிமை |
149 | வினையில் வென்றியி லாதிங்கு மீண்டதற்கு இனன்மு னிந்திடு மென்றஞ்சி லேம்வசை தனையு மென்னிலந் தாரந் திறலிலேம் எனந கிற்செய்வ தென்சொ லிதயமே. |
|
| நெஞ்சே! முயற்சியில் வெற்றிபெறாது இங்கு மீண்டதற்கு உறவினர் வெறுப்பார் என்று அஞ்சிலேன். உலகோர் கூறும் பழியையும் கருதிலேன். மனையவள் வலிமையில்லாதவன் என இகழ்ச்சிச் சிரிப்புச் சிரித்தால் என் செய்வது? சொல்வாயாக. |
| வினை-முயற்சி. இனன்-உறவினன், தாரம்-மனைவி, நகின்-சிரித்தால். |
| 41 |
| எப்பெருந் துன்பும் ஏகும் மனைநோக்கால் |
150 | இரிஞ ராலுறும் எவ்வமுந் தேகமார் பெரிய புண்களும் பேசருந் துன்பமும் உரிமை வாண்முக நோக்க வொழிதலாற் பிரியை நோக்கம் பெருமருந் தாமரோ. |
|
| பகைவர்களால் ஏற்படும் துன்பமும், போரில், உடம்பில் ஏற்படும் பெரிய புண்களும், அதனாலுண்டாகும் இடும்பையும் கற்பு நிறை காதலியின் அன்புப் பார்வையால் நீங்குகின்றன. ஆயின், காதலியின் நோக்கம் துன்பம் நீக்கும் சிறந்த மருந்தாம் என்க. |
| இரிஞர்-பகைவர். எவ்வம்-துன்பம். உரிமை-காதலி; மனைவி. பிரியை-காதலி. |
| 42 |
| இல்லவள் முகத்துக்கு ஈடின்று திங்களும் |
151 | எழிலி லாளில் லவளெனும் வேசிதேன் மொழிமு கத்தை மதியைமுன் னான்முகன் சுழித ராசினிற் றூக்கத்தட் டோடும்பர் எழுநி சாபதி யின்னுமிங் கெய்திலான். |
|