| நீதி நூல் |
| மனையவள் அழகில்லாதவள் எனக் கூறும் பரத்தையே! உலகைப்படைத்த நான்முகன் தேன்போலும் மொழியையுடைய மனையவளின் முகவொளியின் சிறப்பையும் வானூர்மதியின் சிறப்பையும் உட்குழிந்த தராசுத் தட்டில் வைத்துத் தூக்க, மதியின் தட்டு, முகத்திங்களுடன் துலையொவ்வாது மேலெழுந்து வானஞ்சென்றது. அத் திங்கள் மீட்டும் நிலவுலக மெய்தவில்லை. |
| வேசி-பரத்தை. சுழி-உட்குழிவு. நிசாபதி-திங்கள். நிசா-நிசி; இரவு. |
| 43 |
| தலைவியோடு உறையின் தருங்கேடு இன்று |
152 | ஓவி யாரும் ஒழிக வுறுவல்கள் மேவி நாளும் விளைகநஞ் செல்வியை ஆவி யைஅமு தத்தை அனத்தினைத் தேவி யைப்பிரி யோஞ்சிதை வென்னெஞ்சே. |
|
| நெஞ்சே! நம்மைவிட்டு யாரும் நீங்குக. துன்பங்கள் நாளும் பொருந்திப் பெருகுக. நம் வாழ்வை, உயிரை, அமுதத்தை, அன்னம்போலும் மென்னடை யுணர்வை கற்புக்கடம் பூண்ட தெய்வத்தை நாம் பிரியாதிருந்தால் நமக்கு வரும் கேடு என்ன இருக்கின்றது? (ஒன்றும் இன்று.) |
| ஓவி-விட்டு. உறுவல்கள்-துன்பங்கள். சிதைவு-கேடு. |
| 44 |
| தலைவற்குக் கால்கண்ணாம் தலைவிமிகு பேறுடையாள் |
153 | ஏலுங் கால்கண் ணிலார்கொண்க ரென்னும்வேல் போலுங் கண்ணி புனிதரைத் தாங்கிடக் காலு நானிரு கண்களு நானெனின் மேலு மெற்கினிப் பாக்கியம் வேண்டுமோ. |
|
| வேல்போலுங் கண்களையுடைய தோழியே! தலைவர் உலாவும் காலும் பார்க்குங் கண்ணும் இல்லாதவர் என்று சொல்லுகின்றனை. அவருக்கு யானே இருகால்களும், இரு கண்களும் ஆவேன்., இவற்றுக்குமேல் யான் அடையவேண்டிய பேறு வேறு என்ன இருக்கின்றது? (ஒன்றும் இன்று) |
| ஏலும்-உலாவும். பாக்கியம்-பேறு. |
| 45 |