பக்கம் எண் :

77

 கணவ மனைவியரியல்பு
 
 

அகமென்மை மாதரை அருளொடும் காக்க

154
மென்மை யாகும் விழிமுதல் யாவையும்
நன்மை யாவிட ரின்றிநன் கோம்பல்போல்
வன்மை யின்மட மாதர்கள் பாற்கொடுந்
தன்மை யின்றித் தயையுற வேண்டுமால்.
 மென்தன்மையுடைய கண் நாக்கு மூக்கு காது முதலிய பொறிகளை நலம் பொருந்தக் கேடில்லாமல் செம்மையாகப் பாதுகாத்தல்போல், வன்மைகுறைந்து மென்மை மிகுந்துள்ள அடக்கம் வாய்ந்த பெண்களிடம் கொடுந்தன்மையின்றி அன்பிரக்கம் கொள்ளல் வேண்டும்.
 மென்மை-(அறிவுப் பொறியாகிய இயற்கை) மென்மை. ஓம்பல்-பாதுகாத்தல். மடம்-அடக்கம். தயை-இரக்கம்.
 

46

 வேறு
 காதலர்க்கெம் மெலிவினைக் கதிர்க்காற்றே யுரைமின்
155
ஈண்டிவண் வருவலெனும் இறைவருகி லரவரைத்
தீண்டிய கிரணமதால் தீண்டுதி யெனைவெயிலே
தாண்டிய வளியவர்மெய் தடவியென் னுடல்படர்வாய்
மீண்டில ரிடமெனது மெலிவினை யுரைமுகிலே.
 `மேகம் தவழும் கார்காலத்து இங்கு வருவேன்,ழு என்று கூறிச் சென்ற தலைவர் வரவில்லை. ஞாயிறே! அவரைத் தீண்டிய கதிரால் என்னையும் தீண்டுகின்றாய். காற்றே! அவர்மேல் தழுவி என்மேலும் படர்கின்றாய்., கூறிய முறை தவிர்ந்து மீளாத தலைவரிடம் என் மெலிவினை நீவிர் கூறுமின்.
 முகில்-மேகம். இறைவர்-தலைவர். கிரணம்-கதிர். வெயில்-ஞாயிறு. வளி-காற்று. படர்தல்-படுதல்.
 

47

 வேறு
 இல்வாழ்வார் இருவரும் இயற்கையில் ஒருவரே
156
ஒருதருமற் றொருதருவி னுதவியின்றிக் காய்க்கும்
உயராண்பெண் சேர்க்கையின்றி யொருமகவுண் டாமோ
இருமையின்றி யிருவருமே நம்மனைநம் பொருணம்
மிகுளைநஞ்சேய் எனப்பொதுவி னியம்புரிமை யாலும்