பக்கம் எண் :

79

  அதி. 12 - பரத்தமை
 

(கற்பு நிறை அழிவு)

       முறைகடந்து புணர்வோரைத் தண்டிக்கும் முழுமுதல்
158
பண்டோராண் பெண்ணமைத்தவ் விருவருக்கு
     மணமியற்றிப் பரனி ரக்கங்
கொண்டளித்த முறைகடந்து கள்ளவழிப்
     புணர்ச்சிசெயுங் கொடியோர் தம்மை
மண்டலமே வாய்பிளந்து விழுங்காயோ
     அவர்தலைமேல் வானு லாவுங்
கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ
     விதுசெய்யில் குற்ற முண்டோ.
  ஆண்டவன் பழமையாகவே ஆண் பெண் இருவரையும் அமைத்தருளிப் பேரிரக்கத்தால் மணமும் நிகழ்த்துவித்தனன். அம் மணமுறையைக் கடந்து தீய வழியாகக் கூடி இன்பமடையும் கொடியவர்களை நிலமே வாய்பிளந்து விழுங்கமாட்டாயா! வானில் திரியும் மேகமே பெரிய இடியை அவர் தலைமேல் விழச் செய்யமாட்டாயா! இப்படிச் செய்யின் ஏதேனுங் குற்றமுண்டோ?
  பண்டு-பழைமை. பரன்-கடவுள். மண்டலம்-நிலம். உலாவல்-திரிதல். கொண்டல்-மேகம்.
 

1

  வேறு
  கண்மூடும் பூனையொக்கும் கரவயலா னைக்கூடல்
159
ஒருவரு மறிகிலா ரெனவோ ரொண்ணுதல்
கரவயற் குமரரைக் கலத்தல் பூசைதன்
இருவிழி மூடிமற் றெவர்கள் பார்வையுந்
தெரிகிலா தெனப்பயன் றிடுட லொக்குமே.
  ஒரு பெண் தன்னுடைய தவறுதலான ஒழுக்கத்தை ஒருவரும் உணரமாட்டார் என்று கருதி, அயல் ஆடவனைக் கள்ளமுறையாகச் சேர்தல், பூனை தன் கண்களை மூடிக்கொண்டால் யாருக்