| நீதி நூல் |
| கும் பார்வை தெரியாதென்று கருதிப் பாலைக் களவுசெய்வதை யொக்கும். |
| ஒண்ணுதல்-அழகிய நெற்றியையுடைய பெண். கரவு-திருட்டு. பூசை-பூனை. விழி-கண். பயன்-பால். |
| 2 |
| கள்வர் சொல் ஒக்கும் கற்பிலார் சொல்லும் |
160 | அன்னிய ரெம்மியை பன்றிச் சேர்ந்தனர் என்னமின் னிடையவர் இயம்பல் சோரர்கள் பொன்னையாம் வவ்விலேம் பொருள்வந் தெங்களை முன்னைவவ் வியதென மொழித லொக்குமே. |
|
| மின்போலும் இடையையுடைய பெண்கள் அயலார் எங்களுடைய இணக்கமில்லாமல் எம்மைச் சேர்ந்துவிட்டனர் என்று சொல்லுதல், கள்வர் பொருளை யாங்கள் களவுசெய்யவில்லை அப்பொருள்களே எங்களை வலிய வந்து பற்றியது என்று சொல்லுவதை யொக்கும். |
| அன்னியர்-அயலார். இயைபு-இணக்கம். சோரர்-கள்வர். வவ்வியது-பற்றியது. |
| 3 |
| அயலான் அன்புரையால் அழியுங் கற்பு |
161 | மணமகிழ் வாயயல் மைந்தர் தம்மொடுந் தினமுரை யாடிடுந் தெரிவை கற்பது புனலுறு முப்பினைப் போலு மென்மெழுகு அனலுற லென்னவும் அழிவ துண்மையே. |
|
| ஒரு பெண் நாள்தோறும் அயல் ஆண்களுடன் மனமகிழ உரையாடுவாளானால் அவள் கற்பு தண்ணீரைச் சார்ந்த உப்பும், தீயைச் சார்ந்த மெழுகும் அழிவனபோல் அழியும் என்பதாம். |
| புனல்-தண்ணீர். அனல்-தீ. |
| 4 |
| ஆடவன் செயலெலாம் ஆற்றல் பெண் பழிப்பாம் |
162 | வலதுகை துணைவனா மற்றொர் கைமனை தலைவன்செய் தொழிலெலாந் தாரம் ஆற்றுதல் தொலைவிலா வலக்கையின் தொழிலி டக்கர நிலமிசைச் செய்தென நிந்தை மேவுமே. |
|