| நீதி நூல் |
| காமத்தீக்குச் சுள்ளி பரத்தையைக் காண்டல் |
165 | மின்னெரி மூட்டிடு விறகு போற்சுவைக் கன்னலைப் பழித்தசொல் லாரைக் காணலுந் துன்னலும் உன்னலுஞ் சுடுவெங் காமத்தீ தன்னையே மூட்டிடுஞ் சமிதை போலுமே. |
|
| கரும்பினும் இனிய சொல்லையுடைய பொதுமகளிரைப் பார்த்தலும் நெருங்கலும் நினைத்தலும் தீயை மூட்டும் விறகு போன்று உயிரையும் சுடும் கொடிய காமத்தீயை உண்டாக்கும் சுள்ளி ஆம். |
| மின்-ஒளி. கன்னல்-கரும்பு. துன்னல்-நெருங்கல். உன்னல்-நினைத்தல். சமிதை-சுள்ளி. |
| 8 |
| பிறர்மனை சேர்வோர் பேருங்கே டுறுவர் |
166 | உணர்வறுஞ் செல்வமும் உயர்வு மேயறுங் குணமறுங் குலமறுங் கொடிய நோயெலாம் அணவுறு நரகுறு மாயுள் தேயுமால் கணமறு மாதர்தோள் கலக்குந் தூர்த்தர்க்கே. |
|
| கண்ணிமைப் பொழுதும் அயல் பெண்டிர் தோளைச் சேரும் காமுகருக்கு அறிவு கெடும்; பொருளும் மேன்மையும் நீங்கும்; நல்ல தன்மைகள் அழியும்; குடும்பம் ஒழியும்; கொடுமையான நோய்களெல்லாம் வந்து பொருந்தும். இருளுலகத் துன்பமும் எய்தும்; வாழ்நாளும் குன்றும். |
| அணவுறும்-பொருந்தும். கலத்தல்-சேர்தல். தூர்த்தர்-காமுகர். |
| 9 |
| வேறு |
| கற்பிலார்க் காத்தல் களவின்பின் காத்தலாம் |
167 | உவந்து தன்னுளத் தோங்கிய கற்பிலாச் சிவந்த வாயுடைச் சேயிழை யைப்பதி இவர்ந்து சேமஞ்செய் தெய்க்குதல் பட்டிகள் கவர்ந்த பின்பொருட் காவலை யொக்குமே. |
|
| மனமகிழ்ந்து தன் நெஞ்சத்து உறுதியாகிய கற்பிலாச்சிவந்த வாயையுடைய பெண்ணை, அவள் கணவன் விரும்பி (மக்களாலும் |