| பரத்தைமை |
| மதிலாலும்) காத்து வருந்துதல், கள்வர்கள் செல்வப் பொருள்களைக் களவு செய்தபின் (அப்பொருள்களிருப்பனவாக நினைத்து) காத்துக்கொண்டிருக்கும் அறியாமையை ஒக்கும். |
| சேயிழை-சிவந்த அணிகலனையுடைய பெண். பதி-கணவன். இவர்ந்து-விரும்பி. சேமம்-காவல். எய்க்குதல்-வருந்துதல். பட்டிகள்-கள்வர். கவர்ந்த-களவு செய்த. |
| 10 |
| கற்பிலார்க் கெதிராமை கடன்சேர் வெற்றி |
168 | ஓயப் பாரில் உறுந்தெவ்வர் தம்மொடும் ஏயப் போரி லெதிர்ந்திட வென்றியாம் மாயப் போர்செய் மடந்தையர்க் குப்புறம் ஆயப் பாற்செல வென்றி யமையுமே. |
|
| உலகில் பகைமை அழியப் பகைவர்களுடன் சண்டையில் பொருந்தி எதிர்தல் வெற்றியாகும். கற்பிலாத பெண்கள் செய்யும் மயக்கமாகிய தீயசண்டையில் அவர்க்குத் தோற்று அப்பாற் செல்லல் வெற்றியாகும். |
| ஓய்தல்-அழிதல். பார்-உலகம். தெவ்வர்-பகைவர். மாயம்-மயக்கம். |
| 11 |
| வேறு |
| பிறனைச் சேர்வாள் பெரும்பழி சேர்வாள் |
169 | கொழுந னறியில் உயிர்க்கொலையாங் கோவாக் கினையாம் பெரும்பழியாம் அழல்போ னெஞ்சைச் சுடும்பயத்தோ டயலா டவரை யொருபேதை தழுவி யின்ப முறல்மதமா தானுண் டகல்வா யிடையொழுகுங் கழையின் சாற்றை விழைந்ததன்பாற் கடுகி நக்க லேய்க்குமால். |
|
| நெஞ்சைத் தீப்போல் சுடும் அச்சத்துடன் ஒரு பெண் அயலானைச் சேர்தலைக் கணவன் அறிந்தால் உயிர்க்கொலை நேரும். மன்னன் அறிந்தால் கடுந்தண்டனை யுண்டாம். (உலகோரறிந் |