| நீதி நூல் |
| தால்) பெரும்பழியாகும். மேலும், இச் செயல் யானை கரும்பை முறித்து மென்று தின்பதினின்று ஒழுகும் சாற்றை விரும்பி நக்குதற்குச் செல்லும் செயலை ஒப்பதாம். |
| கோ-அரசு. பயம்-அச்சம். மதமா-யானை. கழை-கரும்பு. |
| 12 |
| வேறு |
| பிறனைச்சேர் மாது பேரிருள் அடைவள் |
170 | மற்றொரு வனைச்சேர் மாதிறந் தாலும் வசைநிற்கு முலகமுள் ளளவுஞ் சுற்றமும் வாழ்வுந் துணையுமே நீங்குஞ் சோரநா யகனுமே மதியான் பெற்றசந் ததியு மிழிவுறும் மாண்ட பின்னவி யாஎரி நரகாம் சற்றுநே ரங்கொள் சுகத்தினால் விளையுந் தன்மையீ தரிவையீ ருணர்வீர். |
|
| அயலானைச் சேரும் பெண் மாண்டாலும் உலகமுள்ளவரையும் இகழ்வு நிலைபெறும். உறவு செல்வம் நண்பு நீங்கும். கள்ளக் காதலனும் மதிக்கமாட்டான். பிறந்த பிள்ளையும் பழியுறும். பின்நீங்காத் தீ நரகாம். சிறுபொழுது எய்தும் சிற்றின்பத்தால் எத்துணைப் பெருந்துன்பங்கள் நிகழ்கின்றன என்பதைப் பெண்கள் கருதிப் பார்த்தல் நன்று. |
| வசை-இகழ். துணை-நண்பு. சோரநாயகன்-கள்ளக் காதலன். சந்ததி-பிள்ளை. அரிவை-பெண். |
| 13 |
| வேறு |
| கணவன் நிறையழியின் மனைவியுங் கற்பழிபவள் |
171 | ஓர்பிழை குருவே செய்யின் ஒன்பது பிழைகள் செய்ய நேர்சிறு சீட ரென்ன நிதம்பதி பலமின் னார்தோள் சேர்வது காணு மில்லாள் தினம்பல புருடர்ச் சேர்தல் சீரென வுன்னியன்னான் செலவுபார்த் திருப்பள்மாதோ. |
|
| ஆசிரியன் ஒரு குற்றம் செய்யின் அவன் சிறு மாணாக்கர்கள் ஒன்பது குற்றம் செய்ய நேர்வர். அதுபோல கணவன் நாளும் |