பக்கம் எண் :

85

  பரத்தைமை
 
  பல பெண்களைச் சேர்வது காணும் மனைவி, தானும் பல ஆண்களைச் சேர்வதற்குக் கணவன் வெளியே போகும் நேரத்தை எதிர்பார்த்திருப்பாள்.
 

14

  அயலான் மனையன்னை அரும்பிறப் பாவாள்
172
தன்னைப்போற் பிறரை யெண்ணல்
    தகுதியாந் தான்ம ணந்த
மின்னைப்போ லிடையி னாளை
    விழியினால் நோக்கு வோரைத்
தின்னல்போன் முனிவு கொள்வோர்
    அயலவன் தேவி தன்னை
அன்னைசோ தரிபோ லெண்ணா
    தணைந்திட விரும்ப லென்னே.
  ஒருவன் தன்னைப்போல் பிறரை நினைப்பது நடுவு நிலையாம். தான் கலியாணஞ் செய்துகொண்ட மின்போலும் இடையினையுடைய மனைவியை வேறொருவன் கண்ணால் பார்த்தாலும் குற்றமென்று அவனைக் கொல்லத்தக்க சினங்கொள்வோன், அயலவன் மனைவியைத் தாயைப்போலவும் உடன்பிறப்புப் போலவும் கருதாமல் முறைகடந்து கூட ஆசைப்படுவது என்ன கொடுமை?
  தகுதி-நடுநிலைமை. தின்னல்-ஈண்டுக் கொல்லல். முனிவு-சுனம். தேவி-மனைவி. சோதரி-உடன்பிறப்பி.
 

15

  பரத்தைமைச் செயல்கள் பலவாம் என்ப
173
விதவையைக் கன்னி தன்னை வேசையைப் பிறனில்லாளை
இதமொடு சேர்தல் சேர இச்சித்தல் ஆண்பு ணர்ச்சி
மதனநூ லாதி கேட்டல் வாசித்தல் தகாத செய்கை
விதவிதந் தானே செய்தல் விபசார வினைகளாமே.
  கைம்பெண் மணமாகாதபெண் பரத்தை அயலான் மனைவி இவர்களை அன்புடன் சேர்தலும், சேரவிரும்புதலும், ஆண் சேர்க்கையும், காமநூலைக் கேட்டலும், படித்தலும், ஒவ்வாச்செய்கை பலவகையாகத்தானே செய்தலும் பரத்தைமைச் செயல்களாம்.